செய்திகள்
ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
மட்டு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு புலியடி வீதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர் 63 வயதுடைய சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் விஜயம் செய்து இறந்த உடலை பார்வையிட்டதுடன் கொலைச் சம்பவம் பற்றி விசாரணையையும் மேற்கொண்டார்.
கொலையுண்ட குறித்த வயோதிபரின் குடும்பம் 1990 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு படுகொலையில் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்ததுடன், இவரும், இவரது மகளும் படுகாயமடைந்திருந்தனர்.
இதனால் இவரது ஒரு கை ஊனமுற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.








