வருடல்

செய்திகள்

ஜெனீவாவில் சிங்களக் காடையர்கள் சீற்றம் ! ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டனர் !

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் குறித்து, இந்த உப மாநாட்டினை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக நடத்தியிருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோர் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்தனர்.

இதில் குறிப்பாக சிறிலங்காவில் கடந்த ஓரு ஆண்டுகாலமாக கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த தனது கணவனைத் தேடிவருவரும் சிங்களப் பெண்ணொருவர் கலந்து கொண்டு நிலைமைகளை விபரித்திருந்தார்.

மேலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிறிலங்காவின் அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த 15க்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள், எழுந்து கூச்சல் போடத் தொடங்கினர்.

ஐ.நாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில், தகாத வார்தைகளை பிரயோகித்தனர். அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தும் பாங்கில் செயற்பட்டனர்.

சிங்களக்காடையர்களின் இந்த நடவடிக்கையினை பங்கெடுத்திருந்த பல மேற்குலக நாட்டவர்கள் வன்மையாக கண்டித்தனர். இது சிறிலங்காவல்ல இப்படி அடாவடித்தனத்தையும், அச்சுறுத்தலையும் விடுப்பதற்கு. இது ஐ.நா மனித உரிமைச் சபை. இங்கு பண்பான முறையில், மரியாதையுடன் நடக்க வேண்டுமென, சிங்களக் காடையர்களுக்கு மேற்குலக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் சிங்களக்காடையர்கள் கத்தல், கூச்சலென அடாவடித்தனத்தை மேற்கொண்டனர். ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள், சிங்களக் காடையர்களின் இச் செயலை வன்மையாக கண்டித்ததோடு, ஐ.நா காவல்துறையினா அழைக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் அடாவடித்தனம் அடக்கப்பட்டது.

குறித்த இந்த சிங்களக் காடையர்களுடன், சமீபத்தில் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டிருந்த, மகிந்தவின் வலதுகரங்களான இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களும் இங்கு இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

மறுபுறம், ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வெளியே, ஐ.நா முன்றலில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்பாட்டமொன்றை சிங்களர்கள் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது அச்சுறுத்தி, தங்களது அடாவடித்தன்தை சிங்களக்காடையர்கள் காட்டியுள்ளனர்.

தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
Murugathasan Foundation
VMF300vnad
தமிழீழத்திற்கான மாணவர் குழுவின் தலைவி திவ்வியா உரை!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • சுகந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும்  போர்க்குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை
  • வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் மோசமான நிலை உருவாகும்: கோட்டபாய எச்சரிக்கை
  • கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் திடீர்  தீ விபத்து!
  • நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் கைது!
  • பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்:
vairamuthu_Thiyakaraja_11042013vnad140
மரண அறிவித்தல்:
kuperan_ma_vnad140
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • சுகந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும்  போர்க்குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை
  • வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் மோசமான நிலை உருவாகும்: கோட்டபாய எச்சரிக்கை
  • கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் திடீர்  தீ விபத்து!
  • நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் கைது!
  • பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
  • “தலைவர் பிரபாகரன் தனிச் சிறப்பு மிக்கவர்” அவரோடு என்னை ஒப்பிடவேண்டாம்: இராஜப்பு ஜோசப் ஆண்டகை
  • நில அபகரிப்பு தொடர்பில் அரசிற்கு எதிராக மேலும் 19 பேர் வழக்குத் தாக்கல்!
  • “13″  இல் எவ்வித திருத்தமுமின்றியே வடக்குத் தேர்தல் நடத்தப்படும்: அரசங்கம் அறிவிப்பு
  • வலி வடக்கில் படையினருக்காக காணி சுவீகரிப்பதில் உறுதி: ஐ.நா பிரதிநிதிகளிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி