வருடல்

முக்கிய செய்திகள்

“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் ஒற்றை வார்த்தைக்காக எல்லா பேதங்களையும் மறந்து ஒன்றுகூடவேண்டும்!

எதிர்வரும் 27 ஆம் திகதி (27.02.2012) ஜெனீவாவில் ஆரம்பமாகும்  மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும்  திரண்டு சர்வதேச போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்கான நீதியை கோரியும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என்று தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் மற்ரும் நாம் தமிழ்ர் இயங்க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தோடு ஜெனீவா நோக்கி பல நாட்களாக மனித நேய நடைப்பயணம் மேற்கொள்ளும்  தம்பிகளின் நடைப்பயணங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

இந்த ஐ.நா நோக்கிய ஒன்றுகூடலுக்கு அழைப்பை விடுத்துள்ள நடிகர் சத்தியரஜ் தெரிவிக்கையில் …..

இலங்கைக்கு எதிரான ஆதரவை அமெரிக்கா உட்பட அரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ள இந்த வேளையில் அதற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் தமிழர்களஅகிய நாம் எமது எழுச்சியைக் காட்டவேண்டியது அவசியமாகின்றது. அந்த எழுச்சியே அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.

அந்த எழுச்சியை நாம் காட்டவேண்டுமானால் நமக்குள் இருக்கும் பேதங்களை, நமக்குள் இருக்கும் கிளைகள் எல்லாத்தையும் மறந்து ஒற்றைக் குடையின் கீழ் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் ஒற்றை வார்த்தைக்காக எல்லா பேதங்களையும் மறந்து நாம் பெரியளவில் ஒன்றுகூடவேண்டும்.

அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும். எனவே எல்லோருடைய கவனத்தையும் நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் நமது ஒற்றுமையும், ஒன்றுகூடும் கூட்டத்தின் அளவுமே அதனை ஏற்படுத்தும்.

அனைவரினது கவனமும் நம் பக்கம் திரும்பும் போது தான் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் எமது இலட்சியம் வெற்ரிபெறும் என்றார்.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவிக்கையில்…

சிங்கள பேரினவாத அரசு அந்த மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொல்ஐக்கு, போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை  வலியுறுத்தி எமது அன்புப் பிள்ளைகள் இரண்டு பெரும் நடைபயணத்தை ஐரோப்பாவில் ஜெனீவா நோக்கி மேற்கொண்டுவருகின்றனர்.அந்த நடைபயணம் சிறக்க, வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

அத்தோடு அந்த நடைபயணத்திற்கு வலுச்சேர்த்து வருகின்ற 27  ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையான தொடர் போராட்டங்களில் எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காந நீதிக்கான குரலாக ஒலிக்கவேந்டும் என்றார்.

 

 

 

 

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நவிப்பிள்ளையின் அறிக்கை…
Murugathasan Foundation
Murugathasan Foundation
தமிழீழ சுதந்திர சாசனம்:
தமிழீழ சுதந்திர சாசனம்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
Callum Macrae Interview
Twitter Varudal News
 • போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்! – இலங்கை சிவில் அமைப்புக்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:
 • 14 வயதுடைய மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்கு கைது!
 • வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் மூலஸ்தான கதவிற்கு தீ வைத்த திருடர்கள்!
 • வட பகுதியை விட்டு இராணுவம் வெளியேறுவதன் ஊடாகவே எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் – பொ. ஐங்கரநேசன்
 • மகிந்தவுக்கு ஜெனிவா தொடர்பான எந்த வாக்குறுதியையும் மன்மோகன்சிங் வழங்கவில்லையாம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
 • தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கத் தீர்மான நகல்!
 • போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்! – இலங்கை சிவில் அமைப்புக்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:
 • 14 வயதுடைய மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்கு கைது!
 • வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் மூலஸ்தான கதவிற்கு தீ வைத்த திருடர்கள்!
 • வட பகுதியை விட்டு இராணுவம் வெளியேறுவதன் ஊடாகவே எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் – பொ. ஐங்கரநேசன்
 • மகிந்தவுக்கு ஜெனிவா தொடர்பான எந்த வாக்குறுதியையும் மன்மோகன்சிங் வழங்கவில்லையாம்!
 • கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கும் 17ம் திகதி வரை விளக்க மறியல்!
 • சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை வலிறுத்தி, ஜெனிவாவில் பிரித்தானியா காட்டம்!
 • முதல்நாளே, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தது அமெரிக்கா!