செய்திகள்
அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கையினை மற்றைய அங்கத்துவ நாடுகள் பேண வேண்டும். – பாலித
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் போருக்கு சர்வதேசத்தின் உதவியை நாடிய சிங்கள தேசத்துக்கு இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் என்பது கசப்பானதொன்றாகவே இருந்து வருகின்றது.
எதிர்வரும் பெப்பரவரி 27ம் திகதி ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் கடும் நிலை தோன்றலாம் என்ற அச்சம் சிங்கள தேசத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் .
சர்வதேசத்தின் சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தராதபோது, அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கையினை மற்றைய அங்கத்துவ நாடுகள் பேண வேண்டும். குறிப்பிட்ட சந்தர்பங்களில் எல்லா நாடுகளின் இணக்கத்துடன் தலையீடு நிகழலாம். சர்வதேச சட்டங்களை ஒருதலைப் பட்சமாக பொறுக்கியெடுத்து சில நாடுகள் மீது பிரயோகப் படுத்தல் தவிர்க்கப் படவேண்டும்.
இவ்வாறு கடந்த 19ம் திகதி நடந்து முடிந்த ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் ஆட்சி பதவி உயர்வு மற்றும் வலுப்படுத்தல்’ எனும் ஆலோசனைக் கூட்டமொன்றில் சிறிலங்காவின் ஐ. நா. நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கோகன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் இயற்றப்படும் போதும், அமுல்படுத்தப்படும் போதும், ஐ. நா உரிமைச் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள சம இறைமை கோட்பாடுகள் பராமரிக்கப் பட வேண்டும். அனைத்து நாடுகளையும், முக்கியமாக சிறிய, வலுவற்ற அங்கத்துவ நாடுகளையும் பாதுகாப்பதால், அனைத்து அங்கத்துவ நாடுகளும் உள்ள கடப்பாடு எனவும் பாலித கோகண தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சச்சரவுகள் முதலில் சமாதான முறையிலும், பேச்சுவார்த்தைகள: ஊடாகவுமே தீர்த்துத் கொள்ள முயற்சிக்க வேண்டும் என சிறிலங்கா எப்போதும் பரிந்துரைத்து வந்ததாக குறிப்பிட்ட கோகன, உருப்படியான, நேர்மையான, பொறுக்கி எடுக்காத , உண்மை மதிப்பீட்டின் அடிப்படையில் சட்டத்தை ஆதரிப்பதற்கு ஐ. நா. வுடன் இணைந்து வேலை செய்வதற்கான விருப்பு தமக்கு இன்னமும் குறையவில்லை எனவும் பாலித கோகண தெரிவித்துள்ளார்.













