வருடல்

செய்திகள்

கனேடிய வெளிவிகார அமைச்சரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை முன்னிறுத்தி இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கங்களது அடக்குமுறைகள் குறித்து கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனிதஉரிமை, வகைகூறல் விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் ஏற்படவில்லையானால், அங்கு அடுத்ததாக நடைபெறவிருக்கும் பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கனடா பங்கு பற்றுவதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்றும் ஏனைய பல நாடுகளும் இந்நடைமுறையைப் பின் பற்றலாம்.

இலங்கையின் நடவடிக்கைகளை கனடா உட்பட உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டும், அழுத்தம் கொடுத்துக்கொண்டும் உள்ளன என்றும் ஆனால் சிறிலங்கா கடும் போக்கைக் கடைப்பிடிக்கின்ற காரணத்தால் விடயங்களை முன்னகர்த்திச் செல்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர ஜோன் பெயிர்ட் (John Baird) அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளுக்கு கூறிய பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனேடிய வெளிவிகாரத்துறை அமைச்சரிடம் மனுவொன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகத்தின் சார்பில் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் , அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம் , இயக்குனர் (பிருத்தானியா) முருகதாஸ், நிரந்தர செயலர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

ஜெனீவா செல்வதற்கான பயண ஒழுங்கு விபரம்:
geneva270212vn300
காணொளிகள்
Get the Flash Player to see this player.
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
7 visitors online now
7 guests, 0 members
சமூக வலை அமைப்புகள்
மரண அறிவித்தல்கள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • உலகப் பிரசித்தி பெற்ற களமுனை ஊடகவியலாளரான “Marie Colvin” கொல்லப்பட்டார்!
  • இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா தலைமையிலான “த எல்டர்ஸ்” அமைப்பு
  • ஜெனீவா நோக்கி தமிழர்களே அணிதிரளுங்கள்! ஓங்கி ஒலிக்கும் தமிழகக் குரல்கள்!!
  • லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக தற்காலிக நியமனம்.
  • தமிழ் யுவதியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்த கருனா குழு!
  • ஆணின் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் இன்று மட்டக்களப்பில் மீட்பு!
  • இழந்த உரிமையை மீட்க தமிழர்கள் அயராது உழைக்க வேண்டும்: கனடா சர்வதேச மாநாடு வலியுறுத்து
  • பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
  • கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை!