முக்கிய செய்திகள்
28-01-2012 பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து நடைபயணம் ஆரம்பம்!
நாளை (28-01-2012) சனிக்கிழமை காலை பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் ஆரம்பமாகவுள்ளது.
காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தில் பிரித்தானியாவில் இருந்து ஐந்து பேர் பங்குபற்றுவதாகவும், அவர்கள் பிராண்ஸ் நடாட்டை சென்றடைந்ததும் பிரான்ஸிலிருந்தும் இருவர் அவர்களோடு இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுத்துக்கொள்ளப்படவுல்ள சிறீலங்கா தொடர்பானதும், தமிழர்கள் தொடர்பானதுமான விவாதத்தின் போது தமிழர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காக இதுவரை காலமும் சிறீலங்கா அரசாலும், அரச படைகளாலும் அழிக்கப்பட்டுவரும் இனமாக தமிழினம் இருக்கின்றது என்பதை எடுத்துரைத்து தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர தமிழர் அல்லாத ஐரோப்பிய நாட்டவரை எமக்கு ஆதரவாக திரட்டிக்கொள்ளும் நோக்கோடும் பரப்புரைகளை மேற்கொண்டவண்ணம் நடைபெறவுள்ள இந்த ‘நீதிக்கான நடைபயணம்’ இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.
எனவே நாளை காலை ஆரம்பமாகவுள்ள இந்த நடைபயணத்தின் போது அனைவரையும் வருகைதந்து நடைபயணம் மேற்கொள்பவர்களை ஊக்குவித்து ஆதரவு நல்கும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
நீதிக்காய் குரல்கொடுப்ப்ஓம்!
நடைபயணம் ஆரம்பமாகவுள்ள இடம்: Westminster, London, SW1A 0AA
காலம்: 28-01-2012 சனிக்கிழமை காலை 9:30 மணி
தொடர்புகட்கு: 0044 (0) 7929 349 302
www.forjusticeandpeace.org



