வருடல்

செய்திகள்

தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் இனவெறியர்களால் எரியூட்டி அழிக்கப்பட்ட நாள் மே31!

jaffna_library200vnழத்தமிழர்களின் பெரும் செல்வமாகவும், அறிவு களஞ்சியமாகவும் தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் இனவெறியர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டு இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது.

காலங்கள் கடந்தாலும் ஈழத்தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ வெகு சீக்கிரத்தில் அணையக் கூடியதல்ல.   1981ம் ஆண்டு மே 31ம் திகதி தமிழர்களின் அறிவினை அழிக்க காடையர்களும் இனவெறி பிடித்த அரசியல்வாதிகளும் விஸ்பரூபம் எடுத்த நாள்.

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாகவும், அறிவு களஞ்சியமாகவும் தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகத்தை இனவெறியர்களால் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.

தமிழகத்தில் இல்லாத அரிய பல நூல்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்தன.   97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அறிவுப் பசியைப் போக்க யாழ் பொது நூலக அன்னை தன்வசம் கொண்டிருந்தாள்.

நூலகத்தை அழித்தால் தமிழர்களின் அறிவை அழித்து விடலாம் என்று சிங்கள இனவாதிகள் தப்புக் கணக்குப் போட்டு இனவாத தீயால் பல ஆயிரம் அரிய தமிழ் பொக்கிஷங்களை  சாம்பலாக்கினர்.     யாழ் நூலகம் அழிக்கப்பட்டதை எண்ணி தமிழ் சமூகம் மட்டுமல்லாது சிங்கள அறிவார்ந்த சமூகமும் இன்றும் கவலை கொண்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் முக்கிய விடயமாகும்.   அதுமட்டுமின்றி ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியதுடன் விடுதலைப் போராட்டத்தை மேலும் உத்வேகமூட்டியது எனலாம்.   பீனிக்ஸ் பறவையைப் போல யாழ்.நூலகம் மீண்டெழுந்திருந்தாலும் சாம்பலாகிப் போன நூல்களை எவராலும் திரும்பத்தர முடியாதல்லவா?   எது எப்படியிருந்தாலும் யாழ் நூலக எரிப்பானது ஈழத் தமிழர்களின் மனதில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த உலக தமிழ் சமூகத்தில் ஒரு நீங்கா வடுவாகும்.

jaffna_library1

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
June 2019
M T W T F S S
« Apr    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்