வருடல்

கல்லறைப்பூக்கள்

அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளரான லெப்.கேணல் றாஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு இன்று.

மாதகலில் காவியமான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளரும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியும், முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியுமான  லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில்…

அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் மிகச் சிறந்த போராளியும், தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுமான லெப்ரினன் கேணல் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில ஆக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன் நிலைத் தளபதிகளுள் ஒருவரான றோமியோ நவம்பர் என அழைக்கப்படும் றாஜன் யாழ் மாவட்டத்தின் அழகிய கடற்கரையோரக் கிராமமாந மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அங்கு சோமசுந்தரம், சில்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனாய் சற்குணம் எனும் இயற்பெயரோடு 1966 ஆம் ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதி பிறந்தான்.

றாஜன்-றோமியோ நவம்பர். எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டுஇ இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப்பெற்ற இவன் சக போராளிகளுக்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்துகாட்டினான்.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள். அதில் ஒருவானாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.வியர்வைாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய், தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம்இ உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி. இங்கு அந்நியனுக்கு என்ன வேலை? இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு. யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும்இ உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ…”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ” ,“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போத, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்…….

சிறிய வயதிலேயே மிகச்சிறந்த தாக்குதல்களை நடாத்தி தமிழீழ விடுதலைப் போருக்கு வெற்றியீட்டிய லெப்ரினன் கேணல் ராஜநிடத்தில் தேசியத் தலைவர் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் உச்சமாய் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறப்பு தாக்குதல் அணியாக சகல துறைப் பயிற்சிகளையும் பெற்ற போராளிகளைக் கொண்டு உருவாக்க்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது தளபதியாய் லெப்ரினன் கேநல் ராஜன் அவர்களையும், அதன் சிறப்புத் தளபதியார் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ரா அவர்களையும் நியமித்திருந்தார்.

அத்தோடு தேசியத் தலைவரின் சிந்தனையில் உதித்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளராகவும் லெப்ரினன் கேணல் ராஜன் அவர்களை தலைவர் நியமித்ததானது அவரின் திறமையும், அர்ப்பணிப்பும் மிக்க விடுதலைப் போராட்ட வாழ்விற்கு கிடைத்த அளப்பரிய சான்றுகளாக அமைந்தது.

இவ்வாறான இனிமையான, இளமையான, மிகச்சிறந்த தாக்குதல் தளபதியாக திகழ்ந்த லெப்ரினன் கேணல் ராஜனோடு 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் வேரச்சாவைத் தழுவிய ஒ

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியும், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளரும், முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியுமான

லெப்.கேணல் ராஜன் / றோமியோநவம்பர் –  (சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் /கணேஸ் – (புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)

கப்டன் வன்னியன் – (கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தயாபரன் /பார்த்தீபன்  – (சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அருளையன் / பிரதீப் – (சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ /யோகராஜா  – (பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலைச்செல்வன் /குகன் – (இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதியழகன்  – (நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்  –  (நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Lt-Col-Rajan-500vns

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • சமபந்தன் தலையில் சம்பல் அரைத்த ரணில் – காற்றில் பறந்த ரணிலின் வாக்குறுதி:
  • ஒட்டிசுட்டானில் புராதன சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பு!
  • கடத்தப்பட்ட 15 வயதுச் சிறுமி – யாழில் அதிர்ச்சி!
  • தேசிய மட்ட கோலூன்றிப்பாய்தலில் யாழ்-சாவகச்சேரி மாணவி டக்சிதா புதிய சாதனை!
  • பல்கலைக்கழக வணிக கற்கைகள் பீட வளாகத்தில் புத்தர் சிலை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • சமபந்தன் தலையில் சம்பல் அரைத்த ரணில் – காற்றில் பறந்த ரணிலின் வாக்குறுதி:
  • ஒட்டிசுட்டானில் புராதன சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பு!
  • கடத்தப்பட்ட 15 வயதுச் சிறுமி – யாழில் அதிர்ச்சி!
  • தேசிய மட்ட கோலூன்றிப்பாய்தலில் யாழ்-சாவகச்சேரி மாணவி டக்சிதா புதிய சாதனை!
  • பல்கலைக்கழக வணிக கற்கைகள் பீட வளாகத்தில் புத்தர் சிலை!
  • கனடா – ரொரண்டோவில் வாகனத் தாக்குதலில் 10 பேர் பலி!
  • “மே” முதல் வாரத்தில் இளைஞ்ஞரணி மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ள விக்னேஸ்வரன்!
  • இரணைதீவை மீட்க சிவில் சமூக பிரதினிதிகளுடன் படகுகளில் சென்ற மக்கள்…!
  • வவுனியாவில் – சாரதியின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!