வருடல்

செய்திகள்

ஆசியாவை அடுத்து தாக்கப்போகும் கடும் குளிர், வெள்ளப்பெருக்கு ஆபத்து !

rain200-3பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ எனப்படும் வெப்ப சலனத்தின் தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகள் கடும் வெப்பம், மற்றும் வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் லா –நினா என்ற குளிர் சலனத்தின் பிடியில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய எல்-நினோ கால நிலை மாற்றத்தினால், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் வாட்டியெடுக்கிறது.

உலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், எல் நினோவின் தாக்கம், இந்த ஆண்டு நடுப்பகுதியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து லா -நினா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எச்சரித்துள்ளனர்.

லா- நினா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்றும், இதனால், ஏற்கனவே வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. உதவிச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறுகையில்,

இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் லா-நினா, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். எல்-நினோவினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும்.

எல்-நினோவினால் ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடிமக்கள் அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லா-நினாவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

லா- நினா காலநிலை மாற்றத்தினால், கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறிலங்கா, இந்தியாவில் கடும் குளிரான கால நிலை காணப்பட்டதுடன், அதனால் பலர் இறக்கவும் நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Twitter Varudal News
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
  • GSP+, சிறீலங்காவிற்கு சாதகமாக முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவு!
  • இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு:
  • பூரண ஹர்த்தால் – முற்றாக செயலிழந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள்!
  • விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கண்காணிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட 25 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள்: கோத்தாபய ராஜபக்ச