வருடல்

செய்திகள்

பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு!

tmp_dec_event_2016_7678தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட்ட இம்மாத (மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட அன்னிய சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (18-12-2016) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.

திரு. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்) திருமதி. சசிகலா நிரூபன் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு. ஜீவகாந்தன் ஜீவா) அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. சதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெ.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க, திரு. கிளி அவர்கள்  மலர்மாலையினை  அணிவித்தார்.

மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. பவா அவர்கள் ஏற்ரிவைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் திரு. டேவிட் பரராஜசிங்கம் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திரு. மலரவன் ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள் அணிவித்தார்.

அரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை 1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெ.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன் வழங்க, கவிதைகளை செல்வி. பிரவீனா விஜயகுமார், திருமதி. ஜெசிந்தா சுரேஸ், திரு. ஜெகதீஸ்வரன் நவரட்ணம் ஆகியோர் வழங்கினர்.

தலைமை உரையினை திரு. வேணுகோபால் ஆசிரியர் வழங்க, வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கிய சிறப்பு உரையினை திரு. புரட்சி அவர்கள் நிகழ்த்தினார்.  திருமதி. சாந்தி சத்தியேந்திரன், திரு. இன்பன் மாஸ்ரர், திரு. அகிலன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர்) ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

எழுச்சி கானங்களை திரு. மைக்கல், திரு. சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து லகந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் மன நிறைவையும், தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போது கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:30 ற்கு நிறைவு பெற்றது.

tmp_dec_event_2016_7551 tmp_dec_event_2016_7575 tmp_dec_event_2016_7570 tmp_dec_event_2016_7569 tmp_dec_event_2016_7566 tmp_dec_event_2016_7559 tmp_dec_event_2016_7581 tmp_dec_event_2016_7579 tmp_dec_event_2016_7577tmp_dec_event_2016_7549 tmp_dec_event_2016_7588 tmp_dec_event_2016_7603 tmp_dec_event_2016_7605 tmp_dec_event_2016_7613  tmp_dec_event_2016_7702 tmp_dec_event_2016_7699  tmp_dec_event_2016_7680  tmp_dec_event_2016_7665 tmp_dec_event_2016_7651 tmp_dec_event_2016_7634

 

 

tmp_dec_event_2016_7691 tmp_dec_event_2016_7718 tmp_dec_event_2016_7676 tmp_dec_event_2016_7620 tmp_dec_event_2016_7708

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • 93 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்ற 30 கட்சிகள் போட்டி!
  • கனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது!
  • மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு:
  • சாவகச்சேரி நகர சபையை கைப்பற்ற  கட்சிகள் போட்டி:
  • “முதல் ஈகைத் தமிழன்”  மாவீரன் அப்துல் ரவூப் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • 93 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்ற 30 கட்சிகள் போட்டி!
  • கனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது!
  • மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு:
  • சாவகச்சேரி நகர சபையை கைப்பற்ற  கட்சிகள் போட்டி:
  • “முதல் ஈகைத் தமிழன்”  மாவீரன் அப்துல் ரவூப் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
  • வரலாறாய் போன தேசத்தின் குதலின் 11 ஆம் ஆண்டு நினைவு இன்று:
  • மீண்டும் வாக்குறுதியை நம்பி காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்:
  • உறவுகளால் கைவிடப்படும் முதியோர் – நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்:
  • இன்றுடன் (14-12-2017) முடிகிறது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்: