வருடல்

செய்திகள்

அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக கலந்துரையாட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றுக்கு நீதியமைச்சர் ஒழுங்கு செய்ய வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நான் பலமுறை சிறிலங்கா அதிபருடனும் பிரதமருடனும் பேசியுள்ளேன். அவர்களின் நிலைப்பாடுகளில் மிகவும் நியாயமாக இருக்கின்றன.

இப்போது புதிய நீதியமைச்சர் பதவியேற்றிருக்கிறார். அவர் மூலம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

முன்னைய நீதி அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

சட்டமா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் அதிகாரிகள், ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தைக் கூட்டி, இந்தப்பிரச்சினை குறித்து கலந்துரையாட வேண்டும் என்று நீதியமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சில ஏற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சி செய்வோம்.

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனரே தவிர தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. 1971, 1987-89 காலகட்டங்களில் அரசியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க, அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுபோன்று ஏன் இப்போது முடிவுகளை எடுக்க முடியாது?

அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் அருவருப்பான சட்டம் என்று அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. சாதாரண சட்டத்தில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டம் வேறுபட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது, விசாரணைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள், ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல், சான்றுகளின் தன்மை ஆகியவை வேறுபட்டவை.

தன்னைப் படுகொலை செய்ய வந்தவருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். ஏனென்றால் குற்றவாளி அரசியல்நோக்கத்துடன் செயற்பட்டிருந்தார்.

அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரை விட குறைந்த குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஏன் பொதுமன்னிப்பு அளிக்கக் கூடாது?

சரியான முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்கு, இத்தகைய பிரச்சினைகளை எழுப்பி சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் நபர்களை நான் அறிவேன். ஆனாலும், அரசாங்கம் சரியானதை செய்வதிலிருந்து பின்வாங்கக் கூடாது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. கூட்டமைப்பு வன்முறைகளையும் விரும்பவில்லை. ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மூத்த தளபதி லெப்.கேணல் றாஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு இன்று.
  • முல்லை நிலங்களும் கடல் வளங்களும் மீட்புப் போராட்டத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு  மாவை சேனாதிராஜா அழைப்பு!
  • எதிர்கால தலைமைத்துவம் –  வெள்ளியன்று முடிவை வெளியிடுவார் விக்கி!
  • யாழில் மற்றுமோர் விபத்து – 27 வயது இளைஞ்ஞன் பலி!
  • மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை