வருடல்

செய்திகள்

அரசிற்கு துணைபோவதை கூட்டமைப்பு நிறுத்தவேண்டும் – தமிழ் சட்டத்தரணிகள் பேரவை:

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சில கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனமும், 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனமும் பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

இதற்கு தமிழ் மக்களும் ஆணை வழங்கினார்கள். அதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தேர்தல்களிலும் வெற்றியீட்டியது.

ஆதலால், தமிழ்மக்களின் ஆணைக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவிக்கிறது.
தமிழர்களின் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டே, பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ்த் தலைமைகள் பற்றுதியோடு இருந்தன.

குறிப்பாக, SJV செல்வநயகம் அவர்களின் தலைமையிலான தமிழ் அரசு கட்சியும், பின்னர் தமிழர் கூட்டணியும்(TULF) இந்தக் கொள்கையில் உணர்வுபூர்வமான உறுதியுடன் இருந்ததை அனைவரும் அறிவர்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதனூடாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாதது என்பதை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், தமிழர் தாயகத்தின் அடிநாதமாக இணைந்த வட-கிழக்கு தொடர்பான சிறீலங்கா அரசின் நிலைப்பாடு தற்போது முற்றுமுழுதாக மாறியுள்ளது.

அது, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.
தமிழர் தாயகத்தை பிரிப்பதனூடாக, தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் அரசியலமைப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவு தெரிவிக்குமானால், இலங்கைத் தீவின் சமகால அரசியற் சூழலோடு தமிழ் மக்கள் திருப்தியடைகிறார்கள் என்ற தவறான செய்தி சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுவிடும்.

இது, தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். அத்துடன், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி கிடைப்பதையும், சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களுக்கு உரித்தான காணிகள் விடுவிக்கப்படுவதையும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையையும், வலிந்து காணமற் போகச் செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது, என அறிய முயலும் நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள் தள்ளும்.
அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான விட்டுக்கொடுப்புகளும், பிரதிபலனற்ற சமரச நடவடிக்கைகளும் ஏற்கெனவே தமிழர்களின் உரிமைகளைத் தாரைவார்க்கும் சரணாகதி நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நினைவுபடுத்தும் கடமை மக்களுக்கு உண்டு.

குறிப்பாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை மிகத் தெளிவாக வரையறுக்காத வகையிலேயே புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் காணப்படுகிறது.

அதுவே, புதிய அரசியலமைப்பின் இறுதி அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுமாக இருந்தால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இத்தால் வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை ஏற்றுக் கொள்ளாத, மிகத் தெளிவாக வரையறுக்காத, புதிய அரசியலமைப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
November 2019
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்