வருடல்

செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடைபெற்ற சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது.
சிட்னியில் பிரபல்யமான சங்கீத ஆசிரியரரான சிறீமதி. மாலதி சிவசீலனின் ‘ஸ்ருதிலயா’ மாணவர்கள் வழங்கிய ‘இசை வேள்வி’ நிகழ்வோடு கலை நிகழ்வோடு ஆரம்பித்திருந்தன.
நேர்த்தியான உடை ஒழுங்கும், மேடை அமைப்பும், பாடல்களும் குருவின் திறமையை பறை சாற்றின. தொடர்ந்து, சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் அவர்களின் உரையும், அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றிருந்தன.
தமிழர்களின் கலாச்சாரத்தின் பெருமையையும், எமது விழுமியங்களையும் வெகுவாக பாராட்டிய இவர்கள் தமிழர்களின் கடின உழைப்பு பற்றியும் தமது உரையில் தொட்டிருந்தனர்.
தொடர்ந்து பிரபல்யமான நடன ஆசிரியையான சிறீமதி. மிர்னாளினி ஜெயமோகனின் ‘அபிநயாலயா’ நடனப் பள்ளி மாணவர்களின் ‘ஆடல் இன்பம்’ நிகழ்வு இடம்பெற்று இருந்தது. சிறுவர்கள் முதல் சிரேஷ்ட மாணவர்கள் என பலவித நடனங்களினால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர் மாணவர்கள்.
இந்நிகழ்வுகள் யாவும் சிட்னி வாழ் சிறார்களினாலும், இளையோர்களினாலும் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாடசாலை மாணவியின் திறமை. இவர் உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுக்கவிருக்கும் ஒரு மாணவி ஆகும்.
இளையோர்களை ஊக்குவிப்பதில் சிட்னி தமிழ் அறிவகம் தனக்கென தனியொரு இடத்தை வைத்திருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் இந்த பணி பாராட்டப்பட வேண்டியது ஆகும். சுமார் 200 நூல்களோடு 1991 ஆம் ஆண்டு சிறிய நூலகமாக ஆரம்பமாகிய அறிவகம் இன்று 9,000-க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டு, பல் சேவைகளை வழங்கும் தமிழ் அறிவகமாக வளர்ந்து நிற்கின்றது. அதன் பணிகள் மேலும் சிறக்க  வாழ்த்துவோமாக.
இணைய முகவரி: www.stre.net.au
மின்னஞ்சல்: info@stre.net.au
BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
November 2019
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்