வருடல்

செய்திகள்

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிகமானது என்கிறார் சுரேஸ்:

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, கூட்டமைப்புக்கு எதிரான பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிய ஈபிஆர்எல்எவ், திடீரென தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏமாற்றம் வெளியிட்டிருந்த நிலையில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்று கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

“உள்ளூராட்சித் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தலாகும்.

ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதற்கு தமிழ் அரசு கட்சி முயற்சிக்கக் கூடும்.

ஆனால், வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளை, தமிழ் அரசு கட்சி கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு பலம்வாய்ந்த ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்து கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.

அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். எனினும் அதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.

பலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவினாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம்.

ஆனால், தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை

எமக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை.

அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.

எந்த வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி பின் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதித்த இளஞ்செழியன்!
  • பழையதை விட ஆபத்தான புதிய பயங்கரவாத தடைச் சட்டம்!
  • இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்!
  • சிறீலங்காவை புறக்கணித்த 35 நடுகள்!
  • சர்ச்சைகளுடன் நிறைவடைந்த வடமாகாணசபையின் இறுதி அமர்வு!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை