வருடல்

தகவல்

எமது மூதாதையரின் உணவுப் பழக்கங்களும், வைத்திய முறைகளும்:

ஒரு மனி­த­னின் ஆயுட்­கா­ல­மா­னது சுமார் 100 ஆண்­டு­கள் என்­ப­தும், திட­காத்­தி­ரத்­து ­ட­னும் ஆரோக்­கி­ய­மா­க­வும் இருக்­கும் காலம் 60 ஆண்­டு­கள் என்­ப­தும் அனை­வ­ரி­ன­தும் கணிப்­பீ­டா­கும். எமது மூதா­தை­யர் ஓர­ளவு வய­தி­ன­ரா­கும் போதே பெண்­க­ளும் வய­லி­லும் , வீடு­க­ளி­லும் கடி­ன­மான உழைப்­பா­ளி­க­ளாக இருந்­த­னர்.

அதி­கா­லை­யிலே எழுந்து தமது வீட்டு வேலை­களை முடித்து மதி­யத்­தில் கண­வ­னுக்­குச் சாப்­பாடு எடுத்­துக் கொண்டு செல்­வர் உணவு பரி­மா­றி­ய­தும் கண­வ­னுக்கு ஒத்­தா­சை­யா­கச் சில வேலை­களை மேற்­கொள்­வர்.

காலை உணவு

காலை­யிலே கண­வ­னுக்கு உண­வாக பழைய சோற்றை தயிர்­விட்­டுக் கரைத்­துக் கஞ்­சி­யா­கக் கொடுப்­ப­வர். அத்­து­டன் ஒடி­யல் பிட்டு, குரக்­கன் பிட்டு, தவிட்­டுப் பிட்டு போன்­ற­வற்­றை­யும் உண­ வா­கக் கொள்­வர் ஆனால் பழைய சோற்­றுக் கஞ்­சி­யு­டன் பினாட்­டைக் கொடுக்­கத் தவ­ற­மாட்­டார்­கள். மதிய உண­வு­டன் கட்­டா­ய­மாக ஒடி­யல் மாபிட்டு அல்­லது தவிட்­டுப் பிட்டு அல்­லது குரக்­கன் மாபிட்டு என்­ப­தில் ஏதா­வது ஒன்­றி­ருக்­கும் மதி­யக் கறி­யாக இலை­ வ­கை­யான கனாந்தி இலை­வறை, முருங்கை இலை சுண்­டல், வட்­டுக்­காய்க் குழம்பு என்­ப­ன­வற்­றோடு குளத்­திலே பிடிக்­கப்­ப­டும் கச்­சல் தீயல் மீன் குழம்பு, உடும்பு இறைச்சி என்­ப­ன­வற்­று­டன் மதிய உண­வைப் பரி­மா­று­வர் உணவை அள­வா­கவே உட்­கொள்­வர்.

ஆண்­கள் மதிய வேளை­க­ளில் நாய்­க­ளு­டன் சென்று உடும்பு வேட்­டை­யா­டு­வர் இடை­யி­டையே மான், மரை, அழுங்கு, முள்­ளம்­பன்றி போன்­ற­வற்­றை­யும் வேட்­டை­யா­டு­வர். அவற்­றின் இறைச்­சி­களை நெருப்­பிலே காய­விட்டு கரு­வா­டாக்கி ஏதா­வது மரக்­க­றி­யோடு சேர்த்­துச் சமைப்­பர். அது மிக­வும் ருசி­யா­கவே காணப்­ப­டும்.

பன்றி இறைச்சி மிக­வும் ருசி­யான இறைச்­சி­யா­கும். அது­வும் நெய்­பன்றி இறைச்சி மிக­வும் சுவை­யா­னது அத­னைக் கொண்டு வந்து பெரிய சட்­டி­க­ளில் வெட்­டிப் போட்டு அடுப்­பிலே வைத்­த­தும் அது உருகி அந்த நெய்­யிலே இறைச்­சி­யும் வேகி­வி­டும் இறைச்சி பொன்­னி­ற­மா­ன­தும் அதனை இறக்­கிப் பெரும்­பா­னை­க­ளிலே போட்­டுச் சீலை­யால் கட்டி வைத்து விடு­வர் கறி­ச­மைக்­கும் போது அதிலே இரண்டு அகப்பை எடுத்­துச் சூடாக்கி தூள் இட்­டுப் பரி­மா­று­வர்.

இப்­ப­டி­யாக எமது மூதா­தை­யர் இயற்­கை­யான மரக்­க­றி­க­ளை­யும் இறைச்சி, மீன் என்­ப­ன­வற்­றை­யம் உண­வா­கக் கொண்­ட­னர். அது மட்­டு­மல்ல சிலர் இறைச்­சி­யைத் துண்டு துண்­டாக வெட்டி 1 போத்­த­லில் இட்­டுத் தேன் நிறைய விட்டு ஒரு கிழமை தேனிலே அவிய விட்டு அத­னைச் சாப்­பி­டு­வர் சிலர் போத்­த­லிலே உள்­ளியை உடைத்­துப் போட்டு அதிலே தேன் விட்டு ஊற­விட்டு தேனு­டன் உள்­ளி­யை­யும் சேர்த்­துக் காலை உண­வா­கக் கொள்­வர்.

இவர்­கள் காலை முதல் மாலை வரை வய­ லில் வேலை செய்­வ­தால் மது அருந்­தும் பழக்­கம் அவர்­க­ளி­டம் கிடை­யாது. ஆனா­லும் சிலர் மருந்­தும் விருந் தும் மூன்று வேளை என்­பது போல அதனை மிக­வும் இர­ க­சி­ய­மாக எவ­ருக்­கும் தெரி­யாது அருந்­து­வர் ஆனால் அதனை ஒரு­நாள் அல்­லது மறு நாளை­யும் முடித்­துக் கொள்­வர் அது­வும் கடு­மை­யான வேலை­கள் செய்­யும் போதே அத­னைப் பாவிப்­பர்.

கடு­மை­யான உழைப்பு

எனவே மூதா­தை­ய­ரின் கடு­மை­யான உழைப்பு உணவு உட்­கொள்­ளும் முறை. அவர்­க­ளது தேகா­ரோக்­கி­யம், பண்­பாடு, பொரு­ளா­தா­ரம் என்­ப­வற்­றில் முன்­னி­லை­யான ஒரு வாழ்க்­கையை வாழ்ந்­தி­ருந்­த­னர். ஆனால் இவர்­கள் நோய்­வாய்ப்­ப­டு­வது மிக­வும் அரி­தா­கவே காணப்­பட்­டது. வயது முதிர்ந்­து­தான் தான் அவர்­கள் இறக்க நேரி­டும் ஆனால் எந்த வகை­யி­லும் அவர்­க­ளது உடம்பு குறை­வ­தில்லை சோர்­வ­டை­வ­தில்லை திட­காத்­தி­ர­மா­ கவே காணப்­ப­டு­வர்.

சித்த மருத்­து­வம்

சித்த வைத்­தி­யத்­து­றை­யிலே தமி­ழன் மிக­வும் நம்­பிக்கை கொண்­ட­வன் இத­னால் அன்­றைய கால கட்­டத்­திலே மேலைத்­தேய இர­சா­யன மருந்­து­க­ளை­வி­டுத்து சித்த வைத்­தி­யத்தை நாடி மிக­வும் ஆரோக்­கி­ய­சா­லி­க­ளா­கத் திகழ்ந்­த­னர். எனவே ஆண், பெண் இரு­பா­லா­ரும் விவ­சாய வேலை­க­ளில் ஈடு­பட்­டுக் கடின உழைப்­பா­ளி­க­ளாக இருந்­த­னர்.

தொடர்ந்து வேலை செய்­யும்­போது தேனீ­ருக்­குப் பதி­லாக மருத்­துவ குண­முள்ள இலை­க­ளாக வல்­லாரை, கொத்­த­மல்லி தூது­வளை போன்ற இலை­களை கஞ்­சி­போல தயா­ரித்து அதி­கா­லை­யில் எழுந்த உடனே பருகி வரு­வ­தால் உட­லுக்கு ஏற்­ப ­டும் அசதி சோம்­பல் ஏற்­ப­டாது மிக­வும் ஆரோக்­கி­ய­மாக வாழ்ந்­த­னர்.

அது மட்­டு­மல்ல பெண்­கள் இரவு சோறு சமைக்­கும் போது அரி­சி­யைக் கூட போடு­வார்­கள் காலை உண­வாக அத­னைத் தயிர் விட்டோ அல்­லது தேங்­காய் பாலோ விட்­டுக் கரைத்து எடுத்­துச் செல்­வர் அது ஆண்­க­ளுக்கு மிக­வும் பிடித்­த­மா­னது ஒன்­றா­கும். பழங்­கஞ்சி உட­லுக்கு மிக­வும் உகந்­த­தா­கும்.
ஆனால் வேலை­யில்­லாது வீட்­டிலே முடங்­கு­வது கிடை­யாது ஏன் கர்ப்­பி­ணித் தாய்­மா­ரைக் கூட நல்­ல­வேலை செய்ய வேண்­டும், நெல் குற்ற வேண்­டும். மா இடிக்க வேண்­டும் நன்­றாக நடக்க வேண்­டும் அப்­போது தான் சுகப்­பி­ர­ச­வம் கிடைக்­கும் என வயது முதிர்ந்­த­வர்­கள் கூறு­வார்­கள்.

மகப்­பேற்­றின் போது கூட முருங்­கைப் பட்­டை­யு­டன் வெந்­த­யத்­தை­யும் வெள்­ளைப் பூட்­டை­யும் சேர்த்து அவித்­துக் குடிக்­கக் கொடுப்­பார்­கள் முருங்­கைப் பூவைக் கூட அவித்­துக் கொடுப்­பார்­கள் இத­னால் எந்­த­வித ஆபத்­து­மின்றி குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுப்­பர்.

மகப் பேற­டைந்த தாயொ­ரு­வ­ருக்கு எமது மூதா­தை­யர்­க­ளால் வழங்­கப்­ப­டு­கின்ற பத்­திய உண­வு­களை ஒரு­ மருந்­து­விச்சி போல அரு­கி­ருந்து தவ­றாது கொடுத்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தா­கும். வயிற்­றுப் புண் நீங்க காயம் என்ற பெய­ரில் அரைத்து வெறு­வ­யிற்­றிலே கொடுப்­பர் ஆனால் தண்­ணீர் மூன்று நாள்­க­ளுக்­குக் கொடுக்­க­மாட்­டார்­கள்.
கொத்­த­மல்லி, வேர்க் கொம்பு , மஞ்­சள், சின்­னச் சீர­கம், மிளகு வெள்­ளைப் பூடு என்­ப­வற்றை எடுத்து அம்­மி­யில் அரைத்து அந்­தக் கல­வை­யு­டன் முருங்­கைப் பிஞ்­சு­டனோ அல்­லது வாழைக்­கா­யு­டனோ சேர்த்­துப் பழப்­புளி விட்­டுக் கறி­ச­மைப்­பர். தீட்­டாத புழுங்­கல் அரி­சிச் சோற்­று­டன் (கிச்­சடி இது நன்­றாக அவிய வேண்­டும்) கொடுப்­பர் குழந்­தை­யும் பெற்ற தாயும் வெகு­சி­ரத்­தை­யு­டன் பார்த்­துக் கொள்­வர். பிறந்த குழந்­தை­க­ளுக்­குக் குறிப்­பிட்ட நாள்­க­ளுக்­குப் பின்பு எண்ணை தேய்த்­துக் கை,கால்­கள் என்­ப­வற்றை இழுத்து நெஞ்சை அமர்த்­தித் தலையை வட்­ட­மாக வரு­மாறு அழுத்­திப் பிடித்து இள­வெ­யி­லில் படுக்க விடு­வர். இத­னால் அவர்­க­ளுக்­குத் தேவை­யான குரு­திச் சுற்­றோட்­டம் போதி­ய­ளவு கிடைப்­ப­தால் அவர்­கள் குழந்­தைப் பரு­வத்­தி­லி­ருந்தே ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளா­க­வும் ஆற்­றல் உள்­ள­வர்­க­ளா­க­வும வளர்­கின்­ற­னர்.

பெண்­க­ளுக்­கான உண­வு­கள்

பெண்­கள் பூப்­ப­டைந்து விட்­டால் அவ­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற உண­வு­கள் வேறு­வ­கை­யி­ன­தா­கும். பச்­ச­ரியை மித­மான நீர் விட்­டுக் “ காய்ச்சி நல்­லெண்­ணெ­யில் கத்­த­ரிக்­கா­யைப் பொரித்­துக் கொடுப்­பர். அது மட்­டு­மல்ல கத்­த­ரிக்­காயை (பிஞ்சு) இடித்­துப் பிளிந்து சாற்றையும் கொடுப்­பர். வயிற்­றில் உள்ள காயம் மாறு­வ­தற்­காக வேப்­பி­லை­யை­யும், மஞ்­ச­ளை­யும் சேர்த்து அரைத்து சிறு உருண்­டை­யாக்­கிக் கொடுப்­ப­து­டன் புர­தச் சத்து அதி­க­முள்ள உழுந்து நல்­லெண்­ணெய் என்­ப­ன­வற்றை அதி­க­மா­கக் கொடுப்­பர்.

பெரி­ய­வர்­கள் சிறி­ய­வர்­க­ளுக்கு அடிக்­கடி ஏற்­ப­ டும் பல­வி­த­மான நோய்­க­ளுக்கு வீட்டு வைத்­தி­யம் அல்­லது கைவைத்­தி­யம் என்­ப­ன­வற்­றைக் கையாள்­வார். எமது நாடு உஷ்­ணப்­பி­ர­தே­ச­மாக இருப்­ப­தால் அடிக்­கடி சளி ஏற்­ப­டு­வது உண்டு. இதற்கு கைவைத்­தி­ய­மா­கத் தூது­வளை இலை­யு­டன் கொத்­த­மல்­லி­யைச் சேர்த்து அவித்­துக் கொடுத்­தல் கற்­பூ­ர­வள்­ளிச் சாற்­றைக் கற்­கண்டு கலந்து உண்­ணக் கொடுத்­தல் செவ்­வ­ரத்­தைப் பூவை இடித்து அதன் சாற்­றைக் குடிக்­கக் கொடுத்­தல் போன்ற கைவைத்­திய முறை­யைக் கையாள்­வார்.

காய்ச்­சல் என்­பது எல்லா நோய்­க­ளுக்­கு­மு­ரிய பொது­வான ஒரு அறி­கு­றியே இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளில் அவ­ச­ரப்­பட்டு நோவு கொல்­லி­க­ளைப் பாவிக்­காது புளிக்­கஞ்­சிச் சாயம் என்­ப­வற்­றைக் கொடுத்து உடம்பு சோர்­வ­டை­யாது பார்த்­துக் கொள்­வர். இவை­க­ளுக்கு மாறாது விட்­டால் சித்த வைத்­தி­யரை நாடு­வர். வயிற்­றோட்­டம் வரு­வது உட­லுக்கு ஒவ்­வாத ஒன்று உட­லிற்­குள் சென்­று­விட்­டால் வயிற்­றோட்­டம் ஏற்­ப­டு­வது உண்டு.

அப்­போது கைவைத்­தி­ய­மா­கத் தேயி­லைச் சாயத்­தில் தேசிக்­கா­யைப் பிழிந்­து­விட்­டுத் தேனை­யும் கலந்து கொடுக்­கும் போது வயிற்­றைக் குளி­ர­வைக்க முடி­யும். என­வும் ஓமத்தை வறுத்­தெ­டுத்து அதற்­குள் நீர்­விட்­டுக் கொடுப்­ப­தா­லும் வயிற்­றோட்­டத்தை நிறுத்­து­வர். பெரி­ய­வர்­கள் சிறி­ய­வர்­க­ளி­டையே காணப்­ப­டும் வயிற்­றிலே உள்ள பூச்­சி­களை இல்­லாது ஒழிக்க வேப்­பெண்­ணையை நாளாந்­தம் கொடுத்­து­வ­ரு­வ­தால் பூச்­சித் தொல்லை இல்­லா­மலே போய்­வி­டும் என வேப்­பெண்­ணை­யி­னைக் கொடுப்­பர்.

மேலும் பொக்­கு­ளிப்­பான் (அம்மை நோய்) வந்­தால் அவ­ரைத்் தனி­யான அறை­யில் வேப்­பி­லை­யால் படுக்கை அமைத்து அதில் படுக்க வைப்­பர். வாச­லி­லே­யும் வேப்­பி­லை­யைக் கட்­டித் தொங்­க­வி­டு­வர். வேப்­பி­லை­யில் கிரு­மி­களை அழிக்­கும் சக்தி இருப்­ப­தா­க­வும் அத­னால் அதனை இந்த நோயா­ளர்­க­ளுக்கு அவ­சி­யம் என­வும் கூறு­வர். அந்த வீட்­டில் எண்­ணெச் சட்டி வைக்க மாட்­டார்­கள். இவர்­க­ளுக்கு மிள­காய் இல்­லா­த­படி வெண்­டிக்­காய் தீயல், இதரை வாழைப்­ப­ழம், இள­நீர், தயிர் என்­ப­வற்­றைக் கொடுப்­பர்.

சிலர் பனம் கள்­ளில் வெங்­கா­யத்­தைக் கூடு­த­லாக வெட்­டிப் போட்டு அது நன்­றாக அவிந்த பின் அத­னை­யும் கொடுப்­பர். இதே­போன்று அனைத்து நோய்­க­ளுக்­கும் கைவைத்­திய முறை­யி­னை­யும் பத்­தி­ய­மு­றை­யி­னை­யும் எப்­போ­தும் கையாள்­வ­தில் தவ­ற­மாட்­டார்­கள்.

மூலிகை வைத்­தி­யம்

மூலிகை மருத்­து­வம் என்­பது இயற்­கை­யான மூலி­கை­க­ளின் மருத்­துவ இயல்­பு­க­ளைக் கொண்டு நோயுற்ற போதும் நோய் வரு­முன்­னும் அத­னைப் பாவிப்­பார்­கள்.

என்­ன­தான் விஞ்­ஞா­னம் தன்­னு­டைய உச்­ச­வ­ளர்ச்­சி­யைக் காட்­டி­யுள்ள போதும் எமது மூதா­தை­ய­ரின் மூலிகை கைவைத்­தி­யத்­திற்­கும் அவர்­க­ளின் பத்­திய முறைக்­கும் ஈடா­காது. ஆரோக்­கி­யம் என்­னும் போது தமி­ழ­ரின் மருத்­து­வத்­துக்கே செல்ல வேண்­டும் அவர்­க­ளின் உழைப்பு நீண்ட ஆயுள், தேகா­ரோக்­கி­யம், என்­பன தற்­போ­துள்ள எமது மக்­க­ளுக்­குக் கிடைப்­ப­தில்லை.

அவர்­கள் ஆங்­கில வைத்­தி­ய­மு­றை­க­ளைக் கையாண்டு தேக சுகங்­களை இழப்­ப­து­டன் வீண் பண­வி­ர­ய­மும் அலைச்­ச­லும் ஏற்­ப­டு­வ­து­டன் அவர்­க­ளின் ஆயு­ளும் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கி­றது. ஆகவே இயன்­ற­ளவு இயற்­றை­யான கைவைத்­திய முறை­க­ளைக் கையா­ளப் பழக வேண்­டும் நீண்ட ஆயு­ளும் தேகா­ரோக்­கி­யம் பெற்று சுக­மாக வாழ வேண்­டும்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்