வருடல்

செய்திகள்

காணாமல் போனவர்களின் உறவுகளின் உண்ணாவிரதம் “மக்கள் திரட்சிதான் மாற்றத்திற்கான புரட்சி”

காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் தமது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடருகின்றனர்.

7 வருடங்களாக பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் பொறுக்க முடியாது என்பதால் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
•அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்ட வேண்டும்
•காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட வேண்டும்
•பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்
அவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட 3 கோரிக்கைளும் நியாயமானவை. எனவே அவற்றை நிறைவேற்றுமாறு குரல் கொடுக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.

தமிழீழத்தில்..யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் இளயோர்களே நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தமிழீழ நேரம் 9 மணியளவில் தீர்வுகிடைக்கும் வரையில் தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு போராட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்றுதிரளுங்கள். உங்கள் வலுவான ஆதரவு ஜெனிவா வரை ஒலிக்கவேண்டும்.
தொடரும் அவர்கள் போராட்டம் வழமை போலவே அரசினால் இது வரையில் ஏறெடுத்து பார்க்கப்படாமல் தொடர்கின்றது.

இந்த போராட்டம் தன்னெழுச்சி கொண்ட மக்களின் போராட்டம்!

பொறுமை காத்த மக்கள் பொறுமையை இழந்த உணர்வின் வெளிப்பாடாக இயலாமையின் வலியாக உறவுகள் நிகழ்த்தும் போராட்டம்!
மக்களின் வலி போக்க மக்கள் நடத்தும் போராட்டம் என்பதால் மக்களுக்கு நாம் உலக தமிழ் மக்கள் நிச்சயமாக ஆதரவு நல்க வேண்டும்.

அதுவும் 7 வருடம் பொறுத்திருந்து எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்காத நிலையில்தான் வேறு வழியின்றி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஏற்கனவே அரை உயிருடன்தான் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த உண்ணாவிரதத்தில் போனபின்புதான் அரசு இவர்களுக்கு பதில் சொல்லப் போகிறதா?;

இவர்கள் கேட்பது எல்லாம் காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் சிறையில் இருக்கும் தமது உறவுகளை விடுதலை செய்யும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் கொடிய பயங்கரவாத சட்டத்தை நீக்கும்படி
இவை நியாயமான கோரிக்கைகள்தானே. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள்தானே இன்றைய ஆட்சியாளர்கள்.
அப்படியிருந்தும் ஏன் இதவரை இவற்றை செய்யவில்லை? வெறும் அலட்சியத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்ந்த சிங்கள தலைவர்கள்கூட இந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் இந்த மக்களின் வாக்கைப் பெற்று பதவியை அனுபவிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இந்த மக்களின் குறைகளை கேட்க கூட முன்வருவதில்லை
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா கூறினார். அவர் கூறியபடி தீர்வு பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை இந்த மக்களின் குறைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம்.

யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் காணாமல் போனோர் கண்டு பிடிக்கவில்லை. சிறையில் உள்ளோர் விடுதலை செய்யப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?
முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் மக்களின் அனைத்து போராட்டங்களும் முடக்கப்பட்டாலும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டங்கள் எப்பொழுதுமே வலிமையானவையாக அடக்க முடியாததாக, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாததாக இருந்து வந்துள்ளன.

அரசினால் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த பட முடியாத உண்மை உணர்வுகளை முன்வைத்து போராடும் உறவுகளின் உணர்வலைகள் அரசியல் முலாமிடப்பட மக்கள் ஒருபோதுமே அனுமதிக்க கூடாது.

மக்கள் தலைவர்கள் என்பவர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் என்றால் தாம் முதலில் களமிறங்கி போராட வேண்டும் மக்களை போராட சொல்வதற்கு முன்பு.
இது மக்களாக முன்னெடுத்து மக்களாக நடத்தும் போராட்டம்!
காரணம் அங்கு பட்டினியில் நலிந்து கொண்டு இருப்பவர்கள் மக்கள் மட்டுமே.
போராடும் மக்களின் போராட்டத்தை எவரும் தமக்கானது என உரிமை கோர போராடும் மக்களும் அனுமதிக்க கூடாது.
உலக தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் அடுத்தவர் குளிர் காயும் பரப்புரைகளை செய்ய கூடாது.
மாற்று வழி சிந்தித்து நீண்ட கால போராட்ட வடிவமாக இந்த போராட்டம் மாற்றப்பட வேண்டும்.
தீர்வினை இலங்கை அரசு இன்று மட்டுமல்ல என்றுமே தரப்போவதில்லை.

தமிழர் பிரதிநிதிகளும் தட்டி கேட்க போவதும் இல்லை.
மனித உரிமை அமைப்புகள் சர்வதேசம் என இந்த போராட்டத்தை எந்த கலப்படமும் இன்றி உண்மையான மக்களின் போராட்டமாக அனைத்துலகிடம் நீதி பிழைத்த மாந்தரின் போராட்டம் என அடையாளம் காட்டி எடுத்து செல்லும் தேவை உண்டு.

சாகும் வரை உண்ணாவிரதம் என்றால் சாக விட்டு பார்க்கும் சிங்கள பேரினவாத அரசு. அரசுக்கு வலிக்காமல் அரசியல் செய்பர்களும் பார்த்து கொண்டு இருப்பார்கள்.

சர்வதேச மன்னிப்பு சபைகூட பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

ஆனால் இலங்கை அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மிக இலகுவாக காலம் கடத்துகிறது. அதற்கு ஜ.நா வும் மேலும் தவணை வழங்குகிறது.
தமிழ் மக்களின் வாக்கில் பதவியைப் பெற்றுள்ள அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இனியும் இந்த அயோக்கியதனம் தொடர அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்தோம்.
எனவே தமிழ் மக்கள் அனைவருக்கும் இப் பிரச்சனையை கொண்டு சேர்ப்போம். அனைவரும் இதற்காக ஒன்று திரள்வோம்.

மக்களையும் மக்கள் போராட்டத்தையும் காப்பாற்றுவோம்!
“மக்கள் திரட்சிதான் மாற்றத்திற்கான புரட்சி”

– ஈழத்து நிலவன் –

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Twitter Varudal News
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
  • GSP+, சிறீலங்காவிற்கு சாதகமாக முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவு!
  • இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு:
  • பூரண ஹர்த்தால் – முற்றாக செயலிழந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள்!
  • விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கண்காணிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட 25 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள்: கோத்தாபய ராஜபக்ச