வருடல்

செய்திகள்

காலம் சென்ற மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.ஜி (கோபு) அவர்களுக்கு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!

காலம் சென்ற மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.ஜி (கோபு) அவர்களுக்கு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல் வெளியிட்டுள்ளது.

இன்று 15-11-2017 புதன்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், (முழுமையான அறிக்கையினை பார்வையிட இங்கு அழுத்தவும்)

இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், எழுத்தாற்றலில் பன்முக ஆளுமை கொண்டவருமான “கோபு” என அழைக்கப்படும் திரு.எஸ்.எம்.கோபாலரத்தினம் (எஸ்.எம்.ஜி) அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த கவலை அடைகின்றது.

இலங்கையின் ஊடகவரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி கோபு ஐயா அவர்கள்.

யாழ்ப்பாணம் கண்ணாதிட்டியில் 03-10-1930 அன்று பிறந்த எஸ்.எம்.ஜி (கோபு ) அவர்கள் யாழ்-வைத்தீஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றவர். இவர் பின் நாட்களில் மட்டக்களப்பை தனது வதிவிடமாக்கி அங்கே வாழ்ந்துவந்தவர்.

1950 முதல் அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், சிறீ, ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும், ஊர் சுற்றி எனும் பெயரில் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியவர் ஆவார். அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதி பன்முக ஆளுமை கொண்டவராய் தரணியில் வாழ்ந்த காலமெல்லாம் ஊடகப் பணிக்காய் ஓய்வின்றி உழைத்த ஒரு உன்னத ஜீவன். இன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளமையானது தமிழினத்திற்கும், தமிழ் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும்.

கோபு அவர்களின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களால், 04-06-2004 அன்று தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தமை அவரின் சிறந்ததும், ஒப்பற்றதுமான உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகும்.

இவர் ஊடகப்பணியில் எழுத்தாக்கத்தோடு மட்டும் நின்றுவிடாது பல சிறந்த ஊடகவியலாளர்களையும் உருவாக்கியவர். குறிப்பாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களான கானமயில்நாதன், திருச்செல்வம், குகநாதன், கந்தசாமி, அனந்த பாலகிட்ணர் , குகன் தம்பிப்பிள்ளை என பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) அவர்களையே சாரும்.

காலம் சென்ற மூத்த ஊடகவியலாளர் அமரர் கோபு அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்மத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் அதே வேளை அவர்களின் துயரிலும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பங்குகொள்கின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்