வருடல்

செய்திகள்

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது நொண்டிச்சாட்டு: விக்னேஸ்வரன்

ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றத்திலுள்ள தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இதுபற்றி அரசசாட்சியாக மாறிய ஏனைய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பற்றியே அரசாங்கம் தற்பொழுது கரிசனை செலுத்துகிறது. இதில் அரசியல் கலந்திருப்பதாகத் தெரிகிறது. நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.

இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவதாக முன்னாள் பிரதம நீதியரசரான, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரச சாட்சிகளாக மாறிய தமிழர்கள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பது வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே சட்டமா அதிபர் திணைக்களம், வழக்குகளை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசசாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால் கூட வெறுமனே குற்றஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது. இதனால்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை!
  • சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
  • மலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்!
  • இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – மீண்டும் ஆறுமாத கால இழுத்தடிப்பை ஏற்ற ஏமாளிகள் கூட்டமைப்பு:
  • விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: சுவிஸ் கிளை அறிக்கை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை