வருடல்

செய்திகள்

சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகள் – முழு விபரம்:

01.தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்துக்காக புதிய கட்டிடம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 06)
நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற் கொண்டு, யாழ். மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்காக 18,425 வர்க்க அடி அளவிலான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கும், அதற்காக 97.7 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. உலர் வலய வனங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 10)
2010ம் ஆண்டு தரவுகளின் படி இலங்கையிலுள்ள வனங்களானது, நாட்டின் முழு பூமிப்பரப்பில் 29.7மூ ஆக காணப்பட்டது. குறித்த வனங்களை பாதுகாப்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வனங்களுக்கு அருகில் வாழும் பிரஜைகளின் பொருளாதார நிலைமையினை உயர்த்தி, வனங்களை பாதுகாப்பதற்காக “இலங்கை பிரஜைகள் வன முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை” செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க 261.06 மில்லியன் ரூபா செலவில், 2018-2020 ஆண்டு கால பிரிவினுள் மேற்கூறப்பட்ட வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. “1990 சுவசெரிய” அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் (விடய இல. 12)
இந்திய நன்கொடையின் கீழ் தென் மற்றும் மேல் மாகாணங்களில் “1990 சுவசெரிய” அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அச் சேவையினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்காக ‘1990 சுவசெரிய மன்றம்’ இனை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான சட்ட வரைபு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக இச்சேவையினை வியாபிப்பதற்காக மேலும் 209 அம்பூலன்ஸ் வண்டிகளை பயன்படுத்தி, ஏனைய 07 மாகாணங்களிலும் வியாபிப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த மன்றத்தினை ஸ்தாபிக்கும் வரை இவ்வம்பூலன்ஸ் சேவையினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக, புஏமு நுஆசுஐ லங்கா (தனியார்) கம்பனி (புநுடு) மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கால எல்லையினை நீடிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. திருகோணமலை, நிலாவெளி பிரதேசத்தில் சுற்றுலாத்துறையில் தொழில் பயிற்சி மத்திய நிலையமொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 14)
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிலாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் 200 ஏக்கர் அளவில் முன்மொழியப்பட்டுள்ள பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு பயன்படுத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. பேராதெனிய ரோயல் தாவரவியல் பூங்காவினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 15)
196 வருடங்கள் பழைமை வாய்ந்த, 147 ஏக்கர் அளவினைக் கொண்ட பேராதெனிய ரோயல் தாவரவியல் பூங்காவில் 3,500க்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றன. குறித்த பூங்காவினை வருடாந்தம் 1.6 மில்லியன் உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுகின்றனர். அதன் பயனினை அடிப்படையாகக் கொண்;டு அதன் வசதிகளை மேலும் விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இப்பூங்காவினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை அடுத்து வருகின்ற 05 வருட காலப்பிரிவினுள் செயற்படுத்துவதற்கும், அதற்காக 385 மில்லியன் ரூபா நிதியினை திரட்டிக் கொள்வதற்குமாக நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பேரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. குருநாகல் தொடக்கம் தபுள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத வீதியொன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்துக்காக காணிகளை சுவிகரித்துக் கொண்டமையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சலுகை அளித்தல் (விடய இல.17)
‘ரஜரட நவோத்ய’ ஜனாதிபதி வேலைத்திட்டம், ‘புபுதமு பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் (2016-2020) கீழ் செயற்படுத்தப்படுகின்ற குருநாகல் தொடக்கம் தபுள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத வீதியொன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்துக்காக 300 ஏக்கர் காணியினை சுவிகரிக்க வேண்டியுள்ளது. குறித்த சுவிகரிக்கும் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில், அதனால் பாதிக்கப்படுகின்ற பிரஜைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் குறித்த காணிகளுக்காக, பாரிய வேலைத்திட்டங்களுக்காக சுவிகரிக்கப்படுகின்ற காணிகளுக்காக நட்டஈடு வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற விசேட செயன்முறையினை பின்பற்றி நட்டஈடு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. ர்லனசழடழபல ஆய்வு – கல்முனை பிரதான திட்ட வேலைத்திட்டம் (விடய இல. 24)
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் ஒன்றிணைந்த உப நகர அபிவிருத்தி பிரதான திட்டங்களை தயாரிக்கும் பணியானது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பணியினை மேற்கொள்வதற்காக வேண்டி ர்லனசழடழபல ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காக தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக சிங்கப்பூரின் ஆஃள ர்லனசழiகெழசஅயவiஉள ஐளெவவைரவந Pவந. டுவன நிறுவனத்தின் உதவியினை பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. மீத்தொடமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்படைந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற இடங்களிலுள்ள தனியார் உரித்துடைய நபர்களுக்கு நட்டஈடு வழங்குதல் (விடய இல. 25)
மீத்தொடமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை தொடர்ந்து தேசிய கட்டிட பரிசீலனை அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட அனர்த்த வலயத்தின் வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளை அரசாங்கத்துக்கு உரித்தாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், அவ்வாறான 110 காணி உரிமையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்விடம் உரிமையாளர்களுக்கு அவ்விடங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பீட்டு பெறுமதியினை நட்;டஈடாக செலுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்~ன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. ஐந்து மாவட்டங்களில் தொழில்நுட்ப ஐnஉரடியவழசள களை ஸ்தாபித்தல் (விடய இல. 27)
2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட பிரேரணைக்கு அமைவாக புதிய உற்பத்திகளை துரிதப்படுத்துவதற்காக நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வேண்டி 05 மாவட்டங்களிலும் தொழில்நுட்ப ஐnஉரடியவழசள களை ஸ்தாபிப்பதற்கும் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு வேலைத்திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு தேவையான நிதியினை, இலங்கை புதிய உற்பத்தியாளர்களின் ஆணைக்குழுவிற்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. நனோ செய்மதி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பொறியியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவத்தினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 28)
விண்வெளிமயமாக்கலுக்கு உட்படாத நாடுகளை அதன்பால் இட்டுச் செல்வதற்காக அடிப்படை செய்மதி தொழில்நுட்பத்தினை அடைந்துக் கொள்ளும் தகைமையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை ஜப்பானின் முலுருவுநுஊர் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த தொழில்நுட்பத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஆதர் சி. கிளாக் நிறுவனத்தின் இரு பொறியியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் ஜப்பானின் முலுருவுநுஊர் பல்கலைக்கழகம் மற்றும் ஆதர் சி. கிளாக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் ஆராய்ச்சி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை நிர்ணயித்தல் (விடய இல. 29)
மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது ஊசநனவை Pயளளநள (ஊ) சித்திகள் இரண்டினையும் ளுiஅpடந Pயளளநள (ளு) ஒன்றினை ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகள் என அமைச்சரவை அங்கீகரித்தது.
அதனடிப்படையில் இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.சிறு மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளை முன்னேற்றுவதற்காக ஐனெயைn ழுஉநயn சுiஅ யுளளழஉயைவழைn அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 31)
சிறு மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளை முன்னேற்றுவதற்காக ஐனெயைn ழுஉநயn சுiஅ யுளளழஉயைவழைn அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சின் உரிய அதிகாரி ஒருவர் கைச்சாத்திடுவதற்கு கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரி~hட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. புடவைகள் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான செயன்முறையொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 32)
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற புடவைகள் மற்றும் ஆடை உற்பத்திகளை தேசிய சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் அதன் சுகாதாரத்தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற சான்றிதழினை பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கும், அச்சான்றிதழினை வெளியிடும் அதிகாரத்தினை இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்துக்கு வழங்குவதற்கும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஆடைகளின் தரங்களை நிர்ணயிப்பதற்கும், நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபையின் ஊடாக இதனை செயற்படுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரி~hட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. கொழும்பு துறைமுக நகரத்துக்கு போக்குவரத்து அடிப்படை வசதிகளை வழங்குதல் – நிலக்கீழ் கடல் மார்க்கத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 36)
கொள்ளுப்பிட்டிய புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சைத்திய வீதி வரையில் துறைமுக நகரத்துக்கு ஊடாக பிரவேசிக்கின்ற நிலக்கீழ் வீதியாக ஆயசiநெ னுசiஎந மார்க்கத்தினை நீடிக்கும் வேலைத்திட்டத்தினை துறைமுக நகர வேலைத்திட்ட நிர்வனத்துடன் இணைந்து அரச – தனியார் ஒத்துழைப்பு வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. வீரகெடிய, ஜோர்ஜ் ராஜபக்~ விளையாட்டரங்கு அபிவிருத்தி செய்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட இடங்களுக்காக நட்டஈடு வழங்குதல் (விடய இல. 38)
வீரகெடிய, ஜோர்ஜ் ராஜபக்~ விளையாட்டரங்கு அபிவிருத்தி செய்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட இடங்களுக்காக நட்டஈடு மற்றும் வட்டியினை வழங்குவதற்காக 19.5 மில்லியன் ரூபா நிதியினை திரட்டிக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. புத்தளம் மாவட்டத்தின் உப்பு ஈராள் வளர்ப்பிற்காக புதிய பண்ணையினை நிர்மாணிப்பதற்காக அனுமதியினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 39)
ஈராள் உற்பத்தியினை விருத்தி செய்யும் நோக்கில், உயரிய சாத்தியங்கள் உள்ளதாக உறுதிசெய்யப்படுகின்ற வேலைத்திட்ட முன்மொழிவுகளுக்காக ர்iபா iவெநளெiஎந கயசஅiபெ முறையின் கீழ் மாத்திரம், கடும் நிர்ணயங்களுக்கு அமைவாக, புத்தளம் மாவட்டத்தில் புதிய ஈராள் பண்னையொன்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதியினை வழங்குவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மீன்பிடி துறைமுக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் நங்கூரமிடும் பிரதேசத்தினை மையமாகக் கொண்ட இணை வியாபாரங்களை ஏற்படுத்துதல் (விடய இல. 40)
மீன்பிடி துறைமுக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் நங்கூரமிடும் பிரதேசத்தினை மையமாகக் கொண்ட மேலும் பல துறைசார் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சீன மக்கள் அரசாங்கத்தினுள் இலங்கை தேயிலையினை பிரபல்யப்படுத்துதல் (விடய இல. 42)
சீனர்கள் மத்தியில் இலங்கை தேயிலை பிரபல்யப்படுத்தும் நோக்கில் சீன மக்கள் அரசாங்கத்தின் உரிய நிர்வனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர், அதற்கான தகுந்த நடவடிக்கையொன்றை தயாரிப்பதற்கும், சீனாவில் தேயிலை ஏளத்தினை நடாத்துவதற்குமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. அரச பெருந்தோட்ட கம்பனிகளின் செயற்றிறனை அதிகரித்தல் (விடய இல. 51)
அரச பெருந்தோட்ட கம்பனிகளின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், பொதுமக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி, கல்ஓயா பெருந்தோட்ட கம்பனி மற்றும் இலங்கை கஜு கூட்டுத்தாபனம் ஆகிய அரச பெருந்தோட்ட கம்பனிகளில் இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹா~pம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. ‘நில செவன’ வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள மாற்று இடமொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 53)
கண்டி, குண்டசாலை பகுதியில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ‘நில செவன’ வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் மத விவகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இனங்காணப்பட்டுள்ளமையினால், அதற்காக மாற்று இடமொன்று கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள மஹவத்தை கிராமத்தில் இனங்காணப்பட்டுள்ளன. அக்காணியினை குறித்தொதுக்குவது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம ஆகியோர் முன்வைத்த ஒன்றிணைந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 54)
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு உரிய திரௌவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்காக முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இத்துறைமுகத்தினை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. யாழ் மாவட்டத்தில் பால் உற்பத்தி வலயமைப்பினை விருத்தி செய்தல் (விடய இல. 57)
யாழ் மாவட்டத்தில் பால் உற்பத்தி வலயமைப்பினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை 59.8 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனருத்தாபனம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. இலங்கை பொலிஸ் மீள் கட்டமைப்பிற்காக விசேட ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 59)
இலங்கை பொலிஸ் மீள் கட்டமைப்பிற்காக விசேட ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்காக அநுபவம் வாய்ந்த பிரித்தானிய இனத்தவரான சேர் ஹியு ஓர்ட் அவர்களின் சேவையினை பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. அகுரேகொடை பாதுகாப்பு இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதியின் கட்டிட இலக்கம் 06 மற்றும் 07க்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் பிரிவொன்றை வழங்குதல் (விடய இல. 68)
அகுரேகொடை பாதுகாப்பு இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதியின் கட்டிட இலக்கம் 06 மற்றும் 07க்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் பிரிவொன்றை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 372.06 மில்லியன் ரூபா ஒப்பந்த தொகைக்கு ஆஃள ஏளு ஐகெழசஅயவழைn (Pஎவ) டுவன. நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. முப்படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றுக்காக 2017ம் ஆண்டுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மற்றைய புடவை வகைகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 69)
முப்படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றுக்காக 2017ம் ஆண்டுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மற்றைய புடவை வகைகளை 1,887.8 மில்லியன் ரூபா செலவில், னுழஅநளவiஉ வுநஒவடைந யுடடழஉயவழைn ஊழஅஅவைவநந இன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சிபார்சின் அடிப்படையில் தேசிய புடவைகள் உற்பத்தி நிர்வனத்திடம் இருந்து கொள்வனவு செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. விமானநிலைய ஹோட்டலினை நிர்மாணிப்பதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 71)
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமானநிலைய சூழலில் இரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக விலைமனுக்கோருவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நடமாடும் பிரதேசத்தில் மக்கள் கொள்ளளவினை விருத்தி செய்தல் (விடய இல. 72)
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணக்கப்படுகின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்களில் ஒரு மணித்தியாலயத்துக்கு 400 பயணிகள் வெளியேறுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு முடியுமான முன் பொருத்தப்பட்ட பயணிகள் பிரிவு கட்டிடமொன்றை 2018ம் ஆண்டு இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நிர்மாணிக்கப்படுகின்ற களஞ்சியசாலை கட்டிட தொகுதியினை முகாமைத்துவம் செய்தல் (விடய இல. 74)
பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நிர்மாணிக்கப்படுகின்ற களஞ்சியசாலை கட்டிட தொகுதியினை முகாமைத்துவம் செய்வதற்கான ஒப்பந்தத்தினை அவ்விடயம் தொடர்பில் அநுபவம் நிறைந்த பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. நாவலப்பிட்டிய, ராகல, வேவல்வத்தை மற்றும் மாலிபொடை கிரிட் துணை மின்னிலையங்கள் 04 இனை நிர்மாணிப்பதற்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 75)
நாவலப்பிட்டிய, ராகல, வேவல்வத்தை மற்றும் மாலிபொடை கிரிட் துணை மின்னிலையங்கள் 04 இனை நிர்மாணிக்கம் பணியினை 03 பொதிகளாக செயற்படுத்தப்பட உள்ளதுடன், அதன் 02ம் பொதியின் கீழ் லொட் யு மற்றும் லொட் டீ எனும் வகையில் இரு கட்டங்களாக அதற்கு அவசியமான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளது.
அதனடிப்படையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் 02ம் பொதியின் கீழ் லொட் யு இன் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை, 297.2 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையில் ஆஃள. ளுநைஅநளெ டுவன. நிர்வனத்துக்கும், லொட் டீ இன் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை, 122.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையில் ஆஃள. ஊநலடநஒ நுபெiநெநசiபெ (Pஎவ) டுவன. நிர்வனத்துக்கும் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. இலங்கை துறைமுக அதிகார சபைக்காக இரு கப்பல்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 77)
இலங்கை துறைமுக அதிகார சபைக்காக சர்வதேச விலை மனுக்களின் மூலம் இரு கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

31. இலங்கை அரச கொள்முதல் பிரிவிற்காக இலத்திரனியல் கொள்முதல் செயன்முறையினை அறிமுகம் செய்தல் (விடய இல. 78)
இலங்கை அரச கொள்முதல் பிரிவிற்காக இலத்திரனியல் கொள்முதல் செயன்முறையினை அறிமுகம் செய்தல் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32. ‘அரச நிர்வனங்களுக்கு வாகனங்கள் கொள்முதல் செய்தல்’ எனும் அடிப்படையிலான 2017-10-03ம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை (விடய இல. 82)
‘அரச நிர்வனங்களுக்கு வாகனங்கள் கொள்முதல் செய்தல்’ எனும் அடிப்படையிலான 2017-10-03ம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் பின்வரும் சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் போன்ற அரசியல் வாதிகளுக்கு அவசியமான வாகனங்களை நேரடியாக கொள்வனவு செய்யும் முறையின் கீழ் கொள்வனவு செய்தல்.
• அரச உயர் அதிகாரிகளுக்கு அவசியமான வாகனங்களை நிதியியல் குத்தகை முறையின் கீழ் கொள்வனவு செய்தல்.
• அதிக பாவனை மற்றும் அதிக பராமரிப்புடன் கூடிய டபல் கெப் மற்றும் அதிக பயணிகள் ஆசனங்களை கொண்ட வாகனங்களுக்காக செயற்பாட்டு குத்தகை முறையின் கீழ் கொள்வனவு செய்தல்.
• அரச நிர்வனங்களில் வாகனங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக முறையான செயன்முறையொன்றை திறைசேரியின் நிதிக்கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகத்தின் மூலம் செயற்படுத்தல்.
• முறையான அனுமதியின் கீழ் ஏதேனுமொரு அதிகாரிக்கு உரித்தான வாகனம் ஒன்றுக்காக வேண்டி மாத்திரம் மட்டுப்படுத்துவதாக உரிய அமைச்சின் பிரதான கணக்காய்வாளர் அதிகாரிக்கு பொறுப்பளித்தல்.
• ர்லடிசனை இயந்திரத்துடன் கூடிய வாகன பயன்பாட்டுக்காக முன்னுரிமை வழங்கல் மற்றும் பத்து வருடத்துககும் மேல் பழைய வாகனங்களை அவற்றின் அதிக பராமரிப்பு செலவினை கவனத்திற்கொண்டு அவற்றினை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.

33. நீர்கொழும்பு மாவட்ட ஆதார வைத்தியசாலையின் 07 மாடிகளைக் கொண்ட கட்டிட மறுசீரமைப்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் (விடய இல. 88)
நீர்கொழும்பு மாவட்ட ஆதார வைத்தியசாலையின் 07 மாடிகளைக் கொண்ட கட்டிட மறுசீரமைப்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக, சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அந்நிர்மாண பணிகளை இலங்கை இராணுவ படையின் சேவையினை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

34. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக துறைமுக சொத்துக்கள் மற்றும் பொது வசதிகளை குத்தகைக்கு விடல் (விடய இல. 90)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக துறைமுக சொத்துக்கள் மற்றும் பொது வசதிகளை குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த தினம் ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அவ்வொப்பந்தத்தினை செயற்படுத்துவதற்காக உரிய அரச நிர்வனத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்