வருடல்

செய்திகள்

சிறுமி மீதான துஸ்பிரயோகத்திற்கு நீதி கோரி ஓமந்தையில் ஆர்பாட்ட பேரணி:

வவுனியா, ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளம் மாணவியொருவர் நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்று (09.12.17) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அலைகல்லுப்போட்டகுளத்தை சேர்ந்த மாணவியொருவரை வைத்தியர்கள் பரிசோதனைக்குட்படுத்திய போது அம் மாணவி கற்பமாக இருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஓமந்தை பொலிஸார் குறித்த மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர பாடசாலை ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் என்ற 50 வயது ஆசிரியரே காணம் என தெரியவந்ததையடுத்து குறித்த ஆசிரியரை ஓமந்தை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த சிறுவர் துஸ்பிரயோகத்த்தினை கண்டித்தும் சிறுமிக்கு நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் ‘இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா?,’ ‘நீதி வேண்டும் விரைவாக நீதி வேண்டும்’, ‘நீதி வழங்காத்தன் விளைவே துஸ்பிரயோகத்தின் தொடர்ச்சி’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியதுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் மகஸரொன்றையும் கையளித்ததுடன் தமது கோரிக்கை தொடர்பிலும் எடுத்தியம்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த சிறுமியின் தாயாரின் நடத்தையின் காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற காரணமாகியுள்ளது.

எனவே தாயாருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதுடன் குறித்த ஆசிரியருக்கு இவ்வாறான சம்பவம் 11 ஆவது தடவையாகும் எனினும் உயர் அதிகாரிகள் அவருக்கான தண்டனையை வழங்காது இடமாற்றங்களை மாத்திரம் வழங்கியமை அவர் தொடர்ச்சியாக சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடக்காரணமாகவுள்ளது எனவும் தெரிவித்தனர்.

எனவே, ஆசிரியருக்கு தகுந்த தண்டனை விரைவாக வழங்கப்படவேண்டும் என்பதுடன் சில ஊடகங்கள் குறித்த மாணவி நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர பாடசாலையை சேர்ந்தவர் என தவறாக செய்தியை வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக ஆராயாமல் குறித்த பிரசேத்திற்கு வராமல் இச் Nசுயு;தியை வெளியிட்டமையானது எமது கிராம பாடசாலை மணாவர்களுக்கு பாதிப்பை ஏற்படது;தியுள்ளது.

எனவே சில ஊடகங்களின் போக்கு தொடர்பில் நாம் விசனம் கொள்கின்றோம். இது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்