வருடல்

செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த பின் ஏமாற்றத்தோடு திரும்பிய தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்படாமல் அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்ப நேரிட்டது.

அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதி சட்டமா அதிபர், துணை சட்டமா அதிபர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகளின் தரப்பில், உண்ணாவிரதமிருக்கும் மதியரசன் துலக்‌ஷனின் தாயாரும் மாமியாரும், கணேசன் தர்ஷனின் தாயாரும் சகோதரரும், இராசதுரை திருவருளின் மனைவியும் ஆகியோரோடு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், உள்ளிட்ட 9 பேர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில்களை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

“ சுமார் 1 மணித்தியாலயம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன. நீதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க துணை சட்டமா அதிபர்கள், உட்பட பொலிஸ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரையில் 117 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். 25 அரசியல் கைதிகள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக இருக்கின்றார்கள். இவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கினால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலையாவார்கள்.

முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலை செய்துள்ளார். ஆனால், அரசியல் கைதிகள் 117 பேரை விடுவதற்கு நீங்கள் யோசிக்கின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியா நீதிமன்றில் 58 தடவைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 67 சாட்சிகளில், 64 பேர் இராணுவம், ஏனையவர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். விமானத்தின் மூலம் சாட்சிகளை அழைத்து வந்து சாட்சியமளிக்க முடியும்.

யாழ்ப்பாணத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபடுகின்றார்கள். முன்னாள் அமைச்சர்கள் உட்பட தற்போதுள்ள அமைச்சர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்ற போது, ஏன் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லை என நினைக்கின்றீர்கள், சாட்சிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை என்றால், ஏன் இந்த அரசு என்ற கேள்வி எழுந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டியதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ அண்மையில் யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழ் சிறைக் கைதிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தற்போது வழக்கு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தொடர்பில் நிவாரணமொன்றைப் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அச் சிறைக் கைதிகளையும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சிறையிலுள்ள சிறைக் கைதிகளையும் வேறாக வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அச் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுவரை காலம் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர். அவர்களும் அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக யாழ் நகரத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த இரு தரப்பினரதும் பிரதான கேரிக்கையாக இருந்தது வவுனியா நீதி மன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள வழக்கை வவுனிய நீதி மன்றத்திற்கு மாற்றுவதாகும். அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் வெசலுத்திய ஜனாதிபதி, இக்கோரிக்கைகள் நீதி மன்றத்துடன் தொடர்புபட்டவை என்பதால் இது தொடர்பில் சட்ட மா அதிபர் ஊடாக நீதி மன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கல்துரையாடுவதன் மூலம் இருதரப்பினருக்கும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறினார். ஒரே மேசையில் இருந்து கலந்துரையாடுவதன் மூலம் நிலவுகின்ற பல்வேறு தவறான கருத்துக்களை நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எதிர்வரும் சில நாட்களில் ஏனைய பிரச்சினைகள் குறித்து சட்ட மா அதிபர் பொலிஸார் மற்றும் நீதி அமைச்சுடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுக்க முடியுமான தீர்வுகள் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கெண்டனர்.

2017 மாவீரர் நாள் நிகழ்வு விபரம்
BBC TAMIL NEWS 14/11/2017

2ம் லெப். மாலதி – 30ம் ஆண்டு நினைவுகளில்…
Black July – 34 year Remembrance day
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Twitter Varudal News
  • சிறீலங்காவில் அடுத்த வாரம் புயல் ஆபத்து – எச்சரிக்கிறது அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம்:
  • திருகோணமலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு:
  • அவையில் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்த  அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்பு:
  • கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு – கோண்டாவிலில் சம்பவம்:
  • சிறிலங்கா பொதுஜன முன்னணியின் புதிய வேட்பாளர்களாக அதிகளவான பிக்குகளும், இராணுவ குடும்பத்தினரும்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • சிறீலங்காவில் அடுத்த வாரம் புயல் ஆபத்து – எச்சரிக்கிறது அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம்:
  • திருகோணமலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு:
  • அவையில் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்த  அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்பு:
  • கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு – கோண்டாவிலில் சம்பவம்:
  • சிறிலங்கா பொதுஜன முன்னணியின் புதிய வேட்பாளர்களாக அதிகளவான பிக்குகளும், இராணுவ குடும்பத்தினரும்:
  • மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்:
  • யாழ் பல்கலைக்கழக வழாகத்தில் மாவீரர் வாரம் ஆரம்பித்து வைப்பு!
  • உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணய வர்த்தமானியை செயற்படுத்த முடியாதவாறு மேல் நீதிமன்றம் தடைடை!
  • வைத்தியர், தாதியர் உட்பட்ட பணியாளர் பணிப்புறக்கணிப்பால் நோயாளர் அவதி: