வருடல்

செய்திகள்

தமிழீழத் தேசிய துக்க நாள் தொடர்பில் நா.க.த.அ பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிபு;பத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகாரநீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டிக் கொள்வது மட்டுமே அமைய முடியும். இவ்வாறு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐனநாயக வழியில் இத தீர்வினை எட்டிக் கொள்ள தனிநாடு உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய நீதியாக இருக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் விடுக்கப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாளின் முழுமையான அறிக்கை :

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்.

இற்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழத் தாயகத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் ஏனைய வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும் தமிழீழ மக்கள் மீது சிங்களப் பேரினவாதப்பூதம் நடத்திய இனப்படுகொலையின் நினைவு நாள். தமிழர்களாகப் பிறந்து விட்ட காரணத்தால், தமிழ் மொழியைப் பேசிய காரணத்தால், தமிழர்களின் நடைமுறையரசின் கீழ் வாழ்ந்து வந்த காரணத்தால் எமது மக்கள் சிங்களத்தால் கூட்டாகத் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட பெரும் கொடுமையின் நினைவு நாள்.

மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் மக்கள் நலனைப் புறந்தள்ளி அரசுகளின் அவையாக அரசுகளின் நலன்களின் பேணும் வகையில் செயற்பட்டு தமிழினப்படுகொலைக்குத் துணை நின்ற கறைபடிந்ந நாட்களின் நினைவு நாள்.

என்ன குற்றம் செய்தார்கள் நமது மக்கள்? அவர்களின் குரல்வளை கோரமாக நசுக்கப்பட்டதன் காரணம் என்ன? குருதியாற்றில் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டதற்கான நியாயம்தான் என்ன?

உலகப்பந்தில் ஒடுக்கப்பட்ட மக்களாக அல்லாது உரிமைகள் பெற்ற மக்களாக, சமத்துவமாக, பாதுகாப்பாக, கௌரவமாக, இனஅழிப்புக்கு உட்படாது நமது மக்கள் வாழ நினைத்தது தவறா?

தமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்க தாய்நிலம் பிழந்து போர்க்களத்துக்கு சென்ற நம் மண்ணின் புதல்வவர்களைத் தாங்கி நின்றது எம் மக்கள் செய்த தவறா?

தனது நாட்டுக்காகத் தேசத்துக்காகப் போரிட்ட ஒவ்வொரு வீரனையும் உலகின் அனைத்து நாடுகளும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனவே? எமது மக்களுக்கு அந்த உரிமை கிடையாதா?

எமது வீர்களுக்கு ஏன் பயங்கரவாதப் பட்டம்? இப் பட்டம் சூட்டும் அரசுகள் செய்யாத பயங்கரவாதமா? ஒரு புறம் மனித உரிமைகளைப் பேசிக் கொண்டு மறுபுறம் மிக மோசமான யுத்தங்களை ஏவிவிடுவதும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருப்பதுவும் இப்பட்டம் சூட்டும் அரசுகள்தானே, ஏந்தத்தார்மீக உரிமையின்பாற்பட்டு உரிமைகளுக்காகப் போராடும் போராளிகளுக்கு இப் பட்டத்தை அரசுகள் சூட்டுகின்றன?

2001 செப்டம்பர் 11ருக்கு பின்னர் பயங்கரவாதப்பட்டம் என்பது அரசியல் ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது. தமக்கு விரும்பாத அல்லது தமது நலன்களுடன் ஒத்துப் போகாத பேராட்ட அமைப்புகளைப் போராட்டக் களத்தில் இருந்து அகற்றுவதற்கு இப் பட்டம் பயன்படுத்தப்படுகிறது.

சிறிலங்கா அரசினைப் பொறுத்தவரையில் தனது தமிழன அழிப்புக் கொள்கையின நடைமுறைப்படுத்த விடுதலைப்புலிகள் அமைப்பினைப் போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அனைத்துலக அரசுகளைப் பொறுத்வரை இலங்கைத்தீவின் புவிசார் அரசியலுக்குள் விடுதலைப்புலிகள் எனும் புதியதோர் அதிகார மையம் புகுந்து வளர்ச்சியடைந்து வருவதனை விரும்பவில்லை.

இவ்வாறு புதிய அரசியல் மையம் வளர்ச்சியடைவது தமது நலன்கள் அடிப்படையிலான சமன்பாட்டை சிக்கலாக்கும் என அவர்கள் கருதினார்கள்.

இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பை அங்கீகரித்து புதிய அதிகாரமையத்தை உருவாக்காது விடுதலைப்புலிகள் அமைப்பைப் பேராட்டக்களத்தில் இருந்து அகற்ற அவர்களும் விரும்பினார்கள். அவ்விடத்தில் சிறிலங்கா அரசின் நலனும் அனைத்துலக அரசுகளது நலனும் ஓர் புள்ளியில் சந்தித்துக் கொண்டன.

இதன் விளைவாகத்தான் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பும் மனிதப் பேரவலமும் ஊற்றெடுத்தன. இவர்களின் அரசியல் நலன்களே எமது மக்களைக் கொன்று தீர்த்தன. நாம் இவற்றை இங்கு குறிப்பிடுவது அனைத்துலகச் சமூகத்தின் பாத்திரத்தை நிராகரிப்பதற்கும் நோக்கத்துக்காக அல்ல. மாறாக அனைத்துலச சமூகம் தார்மீக நேர்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தவே இதனைக் கூறுகிறோம்.

சிங்களத்தின் தமிழன அழிப்பு தமிழர் தேசத்துக்குத் தந்து பெருந்துயரை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மே18ம் நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளைப் பிரகடனப் படுத்தியிருக்கிறது.

தேசிய துக்கம் என்பதும் ஆறாப் பெருந்துயர்; என்பதும் எமது மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்கால் நினைவுகள் எமக்குள் முதலில் ஏற்படுத்துவது ஆறாப் பெருந்துயரைத்தான்.

இத் துயரில் இருந்து கடும் சினமும் கனலும் எம்முள் எழுகின்றன. இன அழிப்பின் துயர நினைவுகள் ஆறாக் கொடுஞ் சினமாக நமது கூட்டு நினைவுகளில் நெருப்பாகத் தகிக்கின்றன.

இந் நெருப்பு என்றும் உலகத் தமிழர் மக்கள் மத்தியில் கனன்று கொண்டுதான் இருக்கும். எந்தவித அரசியல் சரணாகதியையும் அது சுட்டெரிக்கும். தமிழீழ மக்களின் விடுதலை மட்டுமே கனலும் இந் நெருப்பை ஆற்றுப்படுத்த உதவும்.

முள்ளிவாயக்கால் இனஅழிப்பை நினைவுகூரும் இத் தருணத்தில் முள்ளிவாய்க்காலிலும் தமிழீழத்தின் அனைத்து நிலப்பரப்பெங்கும் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம்

சிங்கள இராணுவத்தின் தமிழன அழிப்பை எதிர்த்து நின்று பெரும் வீரத்துடன் போராடி, தமிழீழ நிலப்பரப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கச் சமர் புரிந்து, தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களை நமது நெஞ்சக்கூட்டினுள் இருத்திக் கொள்வோம்.

அன்பான மக்களே!

முள்ளிவாயக்கால் தமிழன அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளை நடாத்தி சிறிலங்காவைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுமாறு தமிழ் மக்கள் கோருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையும் இக் கோரிகை;கையை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றியருக்கிறது. சுpறிலங்காவின் வடக்கு மகாணசபையும் இத்தகைய தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது. இத் தீர்மானங்கள் முள்ளிவாக்காலுக்கு நீதி கோரும் வகையிலான தீர்மானங்களே!

நாமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மக்கள் அமைப்புகளின் துணையுடன் தமிழன அழிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் அல்லது அதற்கு நிகரான நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கமொன்றை நடத்தி 1.6 மில்லியன் கையெழுத்துக்களுடன் இக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமப்ப்பித்திருந்தோம்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களதும் மனித உரிமை அமைப்புகளதும் வலுவான கோரிக்கiயாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் கோரிக்கை இருக்கிறது. இருந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை இவ் விடயத்தில் காத்திரமான நடவடிக்ககைகளை இதுவரை எடுக்கவில்லை. சிறிலங்கா அரசின் காலந்தாழ்த்தும் நடவடிக்ககைளுக்கு துணைபோகும் வகையில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை செயற்பட்டு வருகிறது.

மனித உரிமைப் பேரவை அரசுகளின் அமைப்பாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். அரசுகளின் முடிவுகளில் நீதியும் மனித உரிமை அக்கறையும் முதன்மைப்பங்கு வகிக்காமல் அரசுகளின் பரஸ்பர நலன்களே முதன்மைப்பாத்திரம் வகிக்கும் நிலை இருப்பது கவலைக்குரியது.

இன்றைய அரசியல் உலக ஒழுங்கு நீதியினதும் தர்மத்தினதும் அச்சுகளில் சுழலாமல் நலன்களின் அச்சில் உழல்வது குறித்து தேசியத் தலைவர் அவர்களும் முன்னர் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதும் இங்கு கவனத்துக்குரியது. மனித உரிமைப்பேரவையில் பலமிக்க அரசுகள் சிறிலங்கா அரசைப் பாதுகாக்க விரும்புகின்றன. சிறிலங்காவின் தற்போதய ஆட்சி இவ் அரசுகளினால் உருவாக்கப்பட்ட ஆட்சியாக இருக்கிறது.

மனித உரிமைப்பேரவையின் எந்த நடவடிக்கைiயும் தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதிக்காத, பலவீனப்படுத்தாத வகையில் இருப்பதனையே இவ் அரசுகள் விரும்புகின்றன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டமை சிறிலங்கா அரசாங்கத்தின் சமநிலையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்iயாகவே இருக்கிறது. அரசுகளின் ஓர் அவையில் அரசற்ற மக்கள் கூட்டம் தமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு செயற்பட வேண்டிய மார்க்கம் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும்.

சிறிலங்கா அரசு தனது ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. பலம் மிக்க அரசுகளின் நலன்களுடன் தமது நலன்களை இணைப்பதில் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் கவனமாக நடந்து கொள்கிறார்கள். இதுவே அரசுகளின் ஆதரவை சிறிலங்கா பெற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த வித்தையினை மனித உரிமைப் பேரவையில் உள்ள அரசுகளும் சிறிலங்காவும் தொடர்ச்சியாகக் செய்து கொண்டிருக்க முடியாது.

நாம் எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா அரசு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சிறிலங்காவின் இறுக்கமான இனவாத அரச கட்டமைப்பு இடமளிக்காது என்ற கருத்துருவாக்கத்தினை அனைத்துலக அரங்கில் செய்து வருகிறோம்.

நடந்த முடிந்த மனித உரிமைப் பேரவைக்கூட்டத்தொடரிலும் சிறிலங்கா மீதான அனைத்துலுக விசாரணை தேவை என்ற கருத்து மனித உரிமை அமைப்புகளிடையே வலுவாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும்வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடரந்து கொண்டே இருக்கும்.

தமிழ் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் ஒதுங்கியிருந்து பார்வையாளர்களாய் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் தமது போராட்டத்தை தமது கையில் எடுத்து நீதிக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக மக்களுடன் இணைந்து செயற்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தச் செயற்பாடுகளை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது.

மனித உரிமைப்பேரவை எமது நீதிக்கான போராட்டத்தில் ஓர் அரங்கு மட்டுமே. இப் போராட்டத்தை நாம் நாடுகள் தழுவியரீதியில் விரிவாக்கம் செய்வோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் திட்டங்களில் இரண்டினை இவ்விடத்தில் குறிப்பிடப்பட விரும்புகிறேன். சிறிலங்கா அரசின் செயற்பாடுகளைக் கண்காணித்து அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தவதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக கண்கானிப்புக்குழுவின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நாம் நீடித்துள்ளோம்.

சட்டத்தரணிகள், விசாரைணயாளர்கள், செயற்பாட்டாளர்களைக் கொண்ட செயலணியொன்றினை அமைத்து சிறிலங்கா தரப்பில் இனஅழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களுடனான சட்ட நடவடிக்கைளில் மேற்குலக நாடுகளில் ஈடுபட இருக்கிறோம்.

நாம் இவற்றைச் செய்து கொண்டிருக்கும்போது சிறிலங்காவால் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை என்பதுவும் அம்பலமாகும். இது சிறிலங்கா மீது அனைத்துலக நடவடிக்கை தேவை என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவும். சிறிலங்கா அரசு தான் இழைத்த குற்றத்தில் இருந்து தப்பித்துப்போகத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கப் போதில்லை.

நாம் இத் தருணத்தில் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இரண்டு வருடங்கள் என்ன இருபது வருடங்கள் காலஅவகாசம் கொடுத்தாலும் சிறிலங்காவின் எந்த ஆட்சியாளர்களும் எந்தவிதமான நடவடிக்கையினையும் இவ் விடயத்தில் எடுக்கப்போவதில்லை.

மகிந்த இராஜபக்ச அரசாங்கமோ அல்லது தற்போதய மைத்ரி – ரணில் – சந்திரிகா அரசாங்கமோ – எல்லாமே இனவாதம் என்ற குட்டையில் ஊறிய மட்டைகளே. மேலும் நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை. இது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு என்பதே உண்மை. சிறிலங்கா அரசு தமிழின அழிப்பை மேற்கொண்டது என்பதனை நேரடியாகக் கூறாவிட்டாலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அமைபு;புசார் குற்றங்கள் ((systemic crime)) என்று சிறிலங்காப் படையினரின் குற்றச்செயல்களை வர்ணித்ததை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி வழங்கும் செயற்பாடுகளிலேயோ அல்லது தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு கானும் செயற்பாடுகளிலேயோ புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கப்போதில்லை என்பதனை கடந்த இரண்டு வருடங்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.

இங்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பிரச்சினை. சிறிலங்காவின் அரசகட்டமைப்பே தமிழின அழிப்புக்கு முக்கிய காரணியாய் உள்ளது.

சிறிலங்கா அரசு மிக இறுக்கமான பௌத்த இனவாத அரசாக மாற்றமடைந்து திரட்சியடைந்து விட்டது. இந்த அரசால் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்கா அரசை மறுசீரமைப்புச் செய்யும் முயற்சிகள் எதுவும் இதுவரை வெற்றி பெறவில்லை. இனியும் வெற்றி பெறப்போவதுமில்லை. சிறிலங்கா அரசு இனவாத அரசாக இறுக்கமடைந்திருப்பதனால் இந்த அரசை தலைமை தாங்குவோர் எவராக இருந்தாலும் இனவாதப் போக்குடன்தான் செயற்படுவார்கள்.

பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், 13வது தீருத்துச் சட்டம், P-TOMS ஒப்பந்தம் எல்லாமே இனவாதப்பூதத்தால் விழுங்கப்பட்டடையே. இதனால் சிறிலங்கா அரசகட்டமைப்பில் இருந்து விடுபட்டதொரு நிலையிலேயே தமிழ் மக்கள் தமது தேசியப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியும்.

தமிழத் தேசியக்கூட்டமைப்பு உட்பட தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இயங்கும் அனைத்து அரசியல் அமைப்புகளும் இந்த அரசியல் யதார்த்தத்தினப் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மூலம் உரிமைகளை வென்றெடுத்து விடலாம் என்று பகற்கனவு காண்பதில் இருந்து விடுபட வேண்டும். தாம் இலவு பார்த்த கிளிகள் போன்று காத்திருப்பது மட்டுமன்றி மக்களையும் அவ்வாறு காக்க வைப்பது அரசியல் அறிவீனம் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் தமிழ் மக்களின் உரிமை வேட்கையினை நீர்த்துச் செய்ய சிறிலங்கா அரசு செய்யும் சூழ்ச்சிக்கு துணைபோக வேண்டாம் என மன்றாட்டமாக் கேட்டுக் கோள்கிறோம்.

ஈழத் தமிழ் டயாஸ்பெறாவை «தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம்» செய்யும் முயற்சியிலும் சிறிலங்கா அரசும் அனைத்துலக அரசுகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றன. சிறிலங்கா அரசுடன் தொடர்பற்றிருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசுடன் தொடர்புபடுத்தும் முயற்சியினை மேற்குலக அரசுகள் தமது நிதிபலத்தின் ஊடாக மேற்கொள்டு வருகின்றன. இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக அபிவிருத்தி எனும் பேசுபொருளை மையமாக வைத்து கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

ஈழத்தமிழர் தேசத்தவர் என்ற நோக்குநிலையில் இருந்த சிந்தித்தும் செயற்பட்டும் வந்த தமிழ் டயாஸ்பொறா அரசியற் செயற்பாட்டாளார்களை சிறிலங்கா தேசத்தவர் எனச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டும் வகையிலேயே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அண்மையில்Centre for povarty analysis ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு சந்திப்புத் தொடர்பாக் கிடைக்கும் தகவல்களும் இத்துகைய தன்மையினைக் கொண்டதாகவே இருக்கிறது.

இவ் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ் டயாஸ்பொறா அரசியற் செயற்பாட்டாளர்களை நாம் வேண்டிக் கொள்கிறோம்.

அன்பானவர்களே!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிபு;பத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய நீதியாக ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும் சுயநிர்ண உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டிக் கொள்வது மட்டுமே அமைய முடியும்.

ஐனநாயக வழியில் இத தீர்வினை எட்டிக் கொள்ள தனிநாடு உள்ளடக்கிய மக்கள் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படுவதே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது உயிரை ஈகம் செய்த அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய நீதியாக இருக்க முடியும். நீதி கிடைக்கும் வரை எமது நீதிக்கான போராட்டம் தொடரும் என முள்ளிவாய்க்கால் நினைவுடன் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை!
  • சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
  • மலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்!
  • இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – மீண்டும் ஆறுமாத கால இழுத்தடிப்பை ஏற்ற ஏமாளிகள் கூட்டமைப்பு:
  • விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: சுவிஸ் கிளை அறிக்கை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை