வருடல்

செய்திகள்

தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் கோபு (கோபாலரத்தினம்) காலமானார்.

“எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் (கோபு) அவர்கள் , மட்டக்களப்பில் இன்று (15/11/2017) புதன்கிழமை காலமானார்.

அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, பத்திரிகைத்துறையில்  வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

தமிழ் பத்திரிகைத் துறையில் 1953 ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.

1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்டு, அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான ” தினக்கதிர் ” நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.

கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.

கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.

யாழ்பாணத்தில் வெளிவந்த ” ஈழமுரசு “பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.

இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென,  உறவினர்கள் தெரிவித்தனர்.

அவரின் ஆத்மசாந்திக்காக வருடல்  இணையத்தளம் பிரார்த்திக்கிறது

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்