உலக செய்திகள்
பாக்கிஸ்தானில் – 20 வருடங்களின் பின் கோயிலில் வழிபட இந்துக்களுக்கு அனுமதி!
பாகிஸ்தானின் அப்போட்டாபாத் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபடுவதற்கு பாகிஸ்தான் இந்துக்களுக்கு இதுவரை காலமும் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், 20 வருடங்களுக்கு பிறகு கோயிலில் வழிபடுவதற்கு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெஷாவர் ஐகோர்ட்டின் நீதிபதிகள் அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் இருநாடுகளிடையே அமைதியை நிலைநாட்டும் பொறுட்டு 20 வருடங்களுக்கு முன்பு அந்த கோவில் மூடப்பட்டது.பின்னர் இந்து அரசு சாரா அமைப்பு ஒன்றின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.