வருடல்

உலக செய்திகள்

பிரித்தானியாலவில், 5 தமிழர் மரணங்களில் சந்தேகம் – விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த வருடம் பிரித்தானியாலவில், கடலில் மூழ்கி ஐந்து இலங்கையர் மரணமான சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பிரித்தானிய கடலில் மூழ்கி ஐந்து இலங்கையர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி பலியான தமிழர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் சகோதரர்கள் இருவர் உட்பட ஐவர் உள்ளடங்குகின்றனர். கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி லண்டன் பகுதியில் வசித்த குறித்த ஐவரும், பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். எனினும் இரண்டு சகோதரர்களும் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதென உயிரிழந்தவர்களின் குடும்ப வழக்கறிஞர் Patrick Roche தெரிவித்துள்ளார். உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எனவும், இலங்கையில் அவர்களது கிராமம் மூன்று மிக பெரிய ஆறுகளால் சூழப்பட்டதென உயிரிழந்த சகோதரர்களின் தந்தை ஆறுமுகம் சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 10 முதல் 14 வயதில் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தனது பிள்ளைகள் இருவரும் கிரிக்கெட், கால்பந்து மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார். தாங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு கோடைகாலத்திலும் பிரித்தானியாவிலுள்ள கடற்கரைக்குச் செல்வோம் எனவும் சில சந்தர்ப்பங்களில் தாம் இல்லாமல் பிள்ளைகள் மாத்திரம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Brighton பல்கலைக்கழகத்தில் கோபி வர்த்தக கற்கைகளை மேற்கொண்டார். அவர் கெம்பர் கடலை நேசித்தார். 2016ஆம் ஆண்டு உயிரிழப்பதற்கு முன்னர் 3 முறை அந்த கடலுக்கு அவர் சென்று வந்தார் என தந்தை கூறியுள்ளார். கெனிகன் என்பவர் உயர்தர மாணவராகும். அவர் மிகவும் ஆரோக்கியமானவராகும். அத்துடன் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் கோபிக்கும் பெரிய அளவிலான எந்த நோய் தன்மையும் காணப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஐவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Twitter Varudal News
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் கடந்த கால (போர்க்கால) கடத்தல்களுக்கு பொறுப்பேற்காது – ரணில்
  • தொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:
  • நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக ரயர்கள் எரிப்பு!
  • வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி!