வருடல்

செய்திகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் நகரில் இடம்பெற்ற மாதாந்த மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

வரலாற்று நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீரமறவர்களினதும், கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ், தியாகி முத்துக்குமார் , மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை,மாமனிதர் குமார் பொன்னம்பலம், மற்றும் இம்மாத காலத்தில் வீர்ச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (29-01-2017) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை கலாபாரத் நாட்டிய கலைக்கூட நிறுவனர் திருமதி ஸ்ரீமதி. ரஜனி சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

பிரித்தானியத் தேசியக் கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை  உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு. சீவரத்தினம் நிமலன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை உலகத் தமிழர் வரலாற்று மையத்தைசேர்ந்த திரு.பவா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து  அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கு, மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெ.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து மலர்மாலையினை  அணிவித்தார்.

மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கும், தியாகச்சுடர் முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கும்  ஈகைச்சுடரினை திருமதி. நவமணி விஜயகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை 31.01.1986 அன்று கிளிநொச்சி கல்மடு பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை சுகு அவர்களின் சகோதரன் திரு ரஞ்சன் குமாரய்யா அவர்கள்  அணிவித்தார்.

மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு போராளி குணா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவிக்க, மேஜர் சோதியா அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி. ஜெசிந்தா சுரேஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலையினை அணிவித்தார்.

கேணல் கிட்டு, லெப். கேணல் குட்டிசிறீ  உட்பட்ட பத்து வீரமறவர்களுக்குமான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை போராளி மனோஜ் அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையினை தளபதி கிட்டு அவர்களின் மருமகன் திரு. பாஸ்கரன் அவர்கள் அணிவிக்க, கேணல் சாள்ஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு போராளி சூட்டி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலையினை அணிவித்தார்.

மாதந்தை,திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் லெப்.கேணல் குமரப்பா அவர்களின் சகோதரன் திரு. பாலசுந்தரம் (பாலா) ஈகைச்சுடரேற்றி மலர் மாலையினை அணிவிக்க, மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு  உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலையினை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து செல்வி. மிதுனா கிருஸ்னகுமார் மலர்வணக்கத்தை ஆரம்பித்துவைக்க அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று சுடரேற்றி, மலர்வணக்கங்களை செலுத்திக் கொண்டனர்.

அரங்க நிகழ்வுகளாக, நடனம், எழுச்சி கானங்கள், மாவீரர் நினைவு சிறப்புரை என்பன இடம்பெற்றன.

“தளரார துணிவோடு களமாடினாய்” எனும் பாடலுக்கான மாவீரர் வணக்க நடனத்தை 1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெ.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன்  அவர்கள் வழங்கினர்.

எழுச்சி கானங்களை திரு. துரைரட்ணம், திரு. மைக்கல், திரு. சுரேஸ் செல்வி மதுஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்க, சிறப்பு உரையினை போராளி திரு. சங்கீதன் அவர்கள் நிகழ்த்தினார், பின்னர் உறுதி யுரை ஏற்ப்போடு, இன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.

இன் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • 93 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்ற 30 கட்சிகள் போட்டி!
  • கனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது!
  • மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு:
  • சாவகச்சேரி நகர சபையை கைப்பற்ற  கட்சிகள் போட்டி:
  • “முதல் ஈகைத் தமிழன்”  மாவீரன் அப்துல் ரவூப் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • 93 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்ற 30 கட்சிகள் போட்டி!
  • கனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது!
  • மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு:
  • சாவகச்சேரி நகர சபையை கைப்பற்ற  கட்சிகள் போட்டி:
  • “முதல் ஈகைத் தமிழன்”  மாவீரன் அப்துல் ரவூப் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!
  • வரலாறாய் போன தேசத்தின் குதலின் 11 ஆம் ஆண்டு நினைவு இன்று:
  • மீண்டும் வாக்குறுதியை நம்பி காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்:
  • உறவுகளால் கைவிடப்படும் முதியோர் – நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்:
  • இன்றுடன் (14-12-2017) முடிகிறது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்: