வருடல்

செய்திகள்

பிரித்தானியாவில் அமைந்துள்ள 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் மாவீரர் நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வு!


பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள “ஈகப்பேரொளி” முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர் நாளான இன்று காலை 9;00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு துயிலுமில்ல பாடல் இசைக்க பொதுச்சுடரேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

பிரதான சுடரை மாவீரர் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார். நினைவுக் கல்லறைக்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் மக்கள் வரிசைக்கிரமமாக சென்று விளக்கேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

இன்றைய தினம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி இக் கல்லறை வணக்க நிகழ்வு காலை 9;00 மணி முதல் 10:00 மணிவரையான ஒரு மணித்தியாலங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

தாயகத்தில் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் திட்டமிட்டவகையில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு தமிழர் தாயகம் சூறையாடப்பட்டு சுடுகாடாக மாறிக்கொண்டிருந்த வேளையில் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும், எம் மக்களைக் காப்பாற்றக் கோரியும் தங்கள் உடல்களில் தீயிட்டு நீதி கோரி பலர் உயிர்த் தியாகம் செய்திருந்தனர்.

தமிழீழ மண்ணையும், மக்களையும் தங்கள் உயிரினும் மேலாய் நேசித்த எம் தொப்புழ்கொடி உறவுகளான தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகளவானவர்கள் இவ்வாறு தியாகமரணம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் ஜெனீவாவில் தன்னுடலை தீக்கிரையாக்கி தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காய் உயிர்த்தியாகம் செய்த மாவீரன் “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள விதைகுழி மேல் கட்டப்பட்டுள்ள 21 தியாகிகளுக்குமான நினைவுக் கல்லறையிலேயே இச் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.​

 

 

 

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்