வருடல்

செய்திகள்

பிரித்தானியாவில் நடைபெற்ற மாசி மாத மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

லெப் கேணல் பொன்னம்மான், மேஜர்  கேடில்ஸ், லெப் கேணல் கௌசல்யன், கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம், மகளிர் படையணி லெப் கேணல் புவிதா, வான் க௫ம்புலி கேணல் ரூபன், வான் க௫ம்புலி லெப் கேணல் சிரித்திரன்,  ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட இம்மாதத்தில்  வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், பேரன்னை பார்வதியம்மா, மாமனிதர் சந்திரரேரு மற்றும் அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான நினைவுவணக்க  நிகழ்வு  பிரித்தானியாவில் இடம்பெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (Oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு கடந்த (26-02-2017) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.

இம்முறை, சவுத்ஹோல் அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பாட்டு நிலையத்தின் சார்பில் இயங்கி வரும் அருணோதயம் தமிழாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து இம் மாத நிகழ்வை நடாத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை அருணோதயம் தமிழாலயத்தின் ஆசிரியர் திருமதி. பிரபாநந்தினி ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறைந்த நாடாளமன்ற உறுப்பினர் மாமனிதர்
அமரர் திரு சந்திரநேரு அவர்களுடைய மகன் சந்திரகாந்தன் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தாயக தேசியக் கவிஞ்ஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் மகன் திரு சோபிதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மேஜர் தாரகை அவர்களின் சகோதரிகள் திருமதி. தயாளினி தர்மராஜா திருமதி. ஐங்கரன் சுமங்கலி ஆகியோர் மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை  ஏற்றி மலர்மாலையினை  அணிவித்தார்.

ஈகைப் பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை  அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழதேசத்தின் விடியலின் அடித்தளமாக விளங்கிய பேரன்னை திருமதி பார்பதியம்மாவின் திருவுருவப்படத்திற்கு திருமதி லதா சதா அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவிக்க, மகளிர் படையணி லெப்.கேர்ணல் புவிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி கவி பிரதீபன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

லெப. கேணல் பொன்னம்மான் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு கைவிக்கம் தமிழ்க்கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியர் திரு .ஐவன் தெய்வேந்திரம் சின்னப்பு அவர்கள் ஈகைச்சுசுடரேற்றி மலர்மாலை அணிவிக்க, மேஜர் கேடில்ஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கரும்புலி கப்டன் மேகலாவின் சகோதரன் திரு பாஸ்கர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை  அணிவித்தார்.

மட்டு அரசியல்துறைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சவுத்ஹோல் அருணோதயம் தமிழர் சனசமூக மேம்பபாட்டு நிலையம் அருணோதயம் தமிழாலயம் இயக்குனர்களான திரு .திருமதி. ஜெயக்குமார் ஜெயசித்திரா ஆகியோர் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தமிழீழ வான் கரும்புலிகளான லெப். கேணல் சிரித்திரன், கேணல் ரூபன் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு திரு . கிருஸ்ணா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தவர்.

தமிழீழ இசைச்சிகரம் சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஈகைசச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

இந் நிகழ்வில், அருணோதயம் தமிழாலயத்தின் சார்பில் நடைபெற்ற அரங்க நிகழ்வுகளாக, அருணோதயம் தமிழாலய நடன ஆசிரியை செல்வி. வாஷினி ஜெயக்குமாரன் அவர்கள் நெறியாள்கையில் “புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்துவாருங்கள்”  “இராஜகோபுரம் எங்கள் தலைவன்”  ஆகிய பாடல்களுக்கு அருணோதயம் தமிழாலயத்தின் மாணவிகளான செல்விகள்- ஆதவி பிரபாகரன், பானுகா ஜீவகன், ஆர்னிகா ஜீவகன், லேனிகா நவனீதன், தர்ஷாயினி ஜெயக்குமாரன், கனீபா கவிதன், ரிஷானா கவிதன், ஆகியோர் நடனத்தை வழங்கியிருந்தனர்.

கவிதைகளை பிரபானந்தினி ரமேஸ், அனுஷா சிவனேசன் ஆகியோர் வழங்க, நோத்தம்ரன் தமிழ்க்கல்விக்கூடத்தின் மாணவி செல்வி உகாஷினி சேனாதிராஜா அவர்கள் மாவீரத்திலகங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

எழுச்சி கானங்களை அருணோதயம் தமிழாலய ஆசிரியர்களான திருமதி. குமுதினி பாலேந்திரன், திருமதி. மனோகரி சிறீதரன் மற்றும் திரு. மைக்கல், திரு. சுரேஸ்,  திரு. சிவா, திரு. ரட்ணம் ஆகியோர் வழங்க  நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.  குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும், இன் நிகழ்வை ஒரு தமிழ் பாடசாலை முன்னின்று நடாத்தியமையும் மன நிறைவையும், தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Twitter Varudal News
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
  • இரா. சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்:
  • விடுமுறை விடுதியாக மாற்றப்பட்ட ஊர்காவற்துறை கடல் கோட்டை!
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட  பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது:
  • வடக்கில் 1000 பட்டதாரிகளுக்கு ஆபிவிருத்தி     மற்றும் ஆசிரியர் துறையில் நியமனம்: