வருடல்

செய்திகள்

புலிகளின் காவல்துறைக்கும், சிறீலங்கா காவல்துறைக்கும் இடையில் பாவித்தியாசம் – எடுத்துக் கூறிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்:

விடுதலைப்புலிகளின் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தசந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் சட்டம் ஒழுங்கை பேணுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது சிவில் சமூக அமைப்புகளின் குறிப்பாக கிராம, மாவட்ட மட்டங்களின் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் அவா்களின் ஒத்துழைப்பு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டது.

இந்தசந்திப்பில் கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனா். அவ்வாறு கருத்து தெரிவிக்கும் போதே விடுதலைப்புலிகளின் காலத்தில் பொது மக்களுக்கும் அதன் காவல்துறையினருக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது எனவும் இது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவில் இடைவெளி காணப்படுகிறது. அதற்கு மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. இதனை கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்