செய்திகள்
புலி உறுப்பினர் எனும் சந்தேகத்தில் கட்டுனாயக்கா விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கட்டுனாயங்கா விமான நிலையத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ள்ளார்.
அருமைநாயகம் புருசோத்தமன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் நோக்குடன் உரிய ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.
இதன்போது கடந்த 14ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் துலானி அமரசிங்கவின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரை இன்றுவரை (17ஆம் திகதி வரை) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், மன்றுக்கு தமது விருப்பத்தை தெரிவிக்க நீதிவான் அனுமதியளித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.