வருடல்

செய்திகள்

போர்க்குற்றங்களை விசாரிக்கும் ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, இலங்கைக்கு திடீர் பயணம்!

கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று இலங்கைக்கு வந்துள்ளார். இந்தக் குழுவினர் கடந்த 25 ஆம் திகதி காலை பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதி, கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். எனினும், போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற தகவல்கள் ஏதும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு மோட்டூ நுகுசியின் ஆலோசனைகளை சிறிலங்கா பெறவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவர் முன்னரும் பலமுறை சிறிலங்காவுக்குப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்