வருடல்

செய்திகள்

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் – உடற்கூற்று பரிசோதனையின் மூலம் “கொலை” என நிரூபணம்!

மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனை செய்ததில் அது மரணம் அல்ல “கொலை” என நிரூபணமாகியுள்ளது.

மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது-29) என்னும் இளைஞரே மர்மமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சப்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு வேளை வீட்டார் அனைவரும் பிரிதொரு நிகழ்வுக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் தனிமையில் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.

வெளியில் சென்றவர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், குறித்த இளைஞன் நித்திரை செய்வதாக நினைத்து எழுப்பவில்லை.

மறு நாள் வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் எழும்பாத நிலையில் மதிய உணவு நேரமாகிய நிலையில் சந்தேகம் கொண்டு எழுப்ப முயன்ற நிலையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமையினை உறவினர்கள் அறிந்தனர்.

இதனையடுத்து உடனடியாக பேசாலைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதோடு நீதிவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட நீதிவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. குறித்த் சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறித்த சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட  போது கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் தென்படுவதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்