வருடல்

செய்திகள்

மாவீரர் நாள் அன்று துயிலுமில்லங்களில் மாவீரர் குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்:

மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான பசீர் காக்கா இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.

இந்த நிகழ்வானது எந்தவொரு அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும், அரசியல் தேவைகளுக்கு எந்தவிதத்திலும் பயன்படுத்தப்படக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியே வந்தோமோ, அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகிறோம்.

இதற்கு அரசியல்வாதிகளினது மாத்திரமன்றி, ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில், மாவீரர் நிகழ்வுச் சூழலில் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

அத்துடன், துயிலுமில்லங்களில் பிரதான சுடரை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவனோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என எல்லோரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது, மாவீரரின் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான கருத்து.

பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதேஎமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லிம் மாவீரர்கள், 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை, வீரச்சாவடைந்துள்ளனர்.

2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லிம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது.

அத்துடன், மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம்.

நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • தமிழர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வந்த எழுத்தாளர் “ஞானி” காலமானார்!
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு?
  • மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம்:
  • மதுபான விற்பனை தொடர்பான இரண்டு அரசிதழ் அறிவித்தல்களும் ஜனாதிபதியால் ரத்து!
  • கறுப்பு பட்டியல் விவகாரம் – நாடுகடத்தப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் குடும்பம்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வந்த எழுத்தாளர் “ஞானி” காலமானார்!
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு?
  • மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே – உச்சநீதிமன்றம்:
  • மதுபான விற்பனை தொடர்பான இரண்டு அரசிதழ் அறிவித்தல்களும் ஜனாதிபதியால் ரத்து!
  • கறுப்பு பட்டியல் விவகாரம் – நாடுகடத்தப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் குடும்பம்:
  • வடக்கில் பரப்புரைக்கு புலிகளின் பாடல்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கபே முறைப்பாடு
  • வடக்கு அபிவிருத்தியில் வடமாகாணசபையையும் உள்வாங்குமாறு இந்தியாவிடம் விக்கி வேண்டுகோள்:
  • முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினரால் நால்வர் கைது:
  • ஜனாதிபதியாக தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியாது: பசில்