உலக செய்திகள்
மோடி அரசு, உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்க வேண்டும்: தனுஷ்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைப்பெற்று வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா தனியார் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதனிடையில் பீட்டா அமைப்பானது பிரபல நடிகர் தனுஷ்க்கு சில வருடங்களுக்கு முன்னர் சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறவர் என்று பாராட்டி விருது வழங்கி கொளரவித்தது. அதே போல தனுஷ் பீட்டா அமைப்பில் உறுப்பினர் என்ற வதந்தியும் சில தினங்களுக்கு முன்னர் பரவியது. ஆனால் தான் அந்த அமைப்பில் உறுப்பினர் கிடையாது என தனுஷ் மறுத்தார்.
இந்நிலையில் இன்று தனுஷ் அளித்த பேட்டியில், சில வருடங்களுக்கு முன்னர் நான் பீட்டாவிடமிருந்து விருது வாங்கியது உண்மை தான். ஆனால் அந்த விடயத்தை இப்போது நான் மிகுந்த அவமானமாக கருதுகிறேன்.
உலகத்தில் உள்ளவர்கள் ஆடு, மாடுகளை கால்நடை என்றழைத்த போது தமிழன் கால்நடைச் செல்வம் என்றழைத்து பெருமிதப்படுத்தினான். ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் விழா நிறைவு பெறாது. உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து பிரதமர் அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். என கூறியுள்ளார்.