வருடல்

கட்டுரை

யாழ் நுாலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி – ஆய்வாளர் தி.திபாகரன்

யாழ்பாணத்தில் உள்ள நுாலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்தில் கொண்டு தமிழ்கல்விமான்கள் 1952ல் ஆனி 14ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர் இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின் விடாமுயற்சியினால் இந்தியாவின் நூலகர் எஸ்.ஆர் இரங்கநாதன்(நூலகவியலின் தந்தை என போற்றப்டுபவர்) அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து நூலகத்துறையில் அவரது முகாமைத்துவத் திறனை பயன்படுத்தி நூலக அமைப்பிற்கான புர்வாங்க திட்டவரைபுகள் வரையப்பட்டது. அவரது பரிந்துரைக்கமைய தமிழக அரசின் கட்டடக்கலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் அவர்கள் யாழ்நுாலக கட்டடக்கலை நிர்மானியாக நியமிக்கப்பட்டார்.

அன்றையநாட்களின் அரசியல் தலையீட்டினாலும் இழுத்தடிப்புக்களாலும் கட்டிடப்பணி ஆமைவேகத்திலேயே நகரமுடிந்தது ஏழாண்டுகால ஈழுபறிக்குமத்தியில் அரசியல் காரணங்களுக்காக நகரபிதாவின் உத்தரவின் பெயரில்
இக்கட்டடத் தொகுதியின் எச் வடிவத்தில் ஒரு சிறு பகுதியை திராவிட கட்டட சிற்பக்கலை மரபுக்கமைய அவசர அவசரமாக கட்டப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டதாக காண்பிக்கப்பட்டு 11 ஒக்டேபர் 1959 அன்று யாழ் முதல்வர் அ.த.துரையப்பாவினால்
திறந்த வைக்கப்பட்டது.

1981ல் நூலகம் எரியுண்ட வேளையில் கூட நரசிம்மனின் வடிவமைப்பான நூலகத்தின் முழுமையான கட்டட திட்டவரைபு பூர்த்தியாக்கப்பட்டிருக்கவில்லை. தென்கிழக்காசியாவிலேயே பெரிய நூலகம் என்ற இன்றைய கால தவறான கருத்தியல் விதைப்பு தமிழர் தரப்பின் தகவல் திரட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட வல்லது. 1950களில் இந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் எச் வடிவிலான திட்ட வரைபின்படி பல மாடிக் கட்டிடத்துடன் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தால் ஒருவேளை தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் பரிணமித்திருக்கலாம்.

ஈழத்தமிழரது வரலாற்று ஆவணங்களையும் கிடைத்தற்கரிய அறிவுப்பொக்கிசங்களயும் அதிகளவான பொது மக்கள் பயன்படுத்தும் நூலகமாகவும், யாழ்மக்களின் கல்வியின் ஊற்றாகவும் தென்னாசியாவில் பிரபலம் வாய்ந்ததும் தமிழிழத்தில் அன்றையநாளில் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.

யாழ் நூலக எரிப்பின் அரசியல் பின்னணியை நேக்கின்

ஐக்கியதேசியக்கட்சி பாரளமன்றுறுப்பினர் காரைநகரைச்சேர்ந்த கலாநிதி தியாகராஜாவை நாச்சிமார் கோவிலடியில் மாவட்டசபை பிரச்சாரக்கூட்டத்தில் வைத்து புலொட் அமைப்பைபின் சுந்தரம் சுட்டுக்கொல்ல அரசபடையானர் நாச்சிமார் அம்மன் கோயில் கோபுரத்தை எரித்து வன்முறையில் ஈடுபட யாழில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

மாவட்டசபைத் தேர்தலை குழப்புவதற்காக அன்றைய விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அனைவரும் லெப்.சீலன் தலைமையில் (18 பேர்)உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோயிலடியில் வைத்து அரசபடைகள் மீது முதலாவது வீதி மறிப்புத் தாக்குதலை 28.05.81 நள்ளிரவு ஒருமணியளவில் நடத்தினர்.

இதேநேரம் மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தல் ஆயத்தம் எல்லா இடமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது நல்லூரில் சிவசிதம்பரத்தின் பிராந்திய செயலகத்தில் ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்த 2 பேர் அரசபடைகள் கொல்லப்பட்டனர்.

பெருமளவு யாழ்மக்கள தேர்தலைப் புறக்கணிப்பதாகவே இருந்தனர் இச்சம்பவத்துடன் மக்கள் கிளர்ந்தெழுந்து அனைவரும் வாக்களித்து கூட்டணியை வெற்றியடையச்செய்தனர் இது ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கத்தை ஆத்திரமூட்டியது.

இது இவ்வாரிருக்க காமினிதிசாநாயக்க, லலித்அத்துலத்முதலி, பிரேமதாசா ஆகியோருக்கிடையேயான அதிகார முக்கோண போட்டியில் காமினி இவர்களை வீழ்த்தி முன்னுக்கு வர இனவாத்த்தை கையிலெடுத்தார். யார் தமிழர்களுக்கு எதிராக பலமாக செயற்படுகிறார்களோ அவர்களே சிங்களதேசத்தின் கதாநாயகர்கள் என்ற அன்றைய சிங்கள இனத்தின் கூட்டுமனநிலையை தனக்கு சாதகமாக காமினி கையாண்டான் 31.05.1981அன்று யாழ்பாணத்திற்கு

3 பஸ்களில் சுமார் 150 வரையான காடையர்களை சிங்களதேசதிலிருந்து தருவித்து விடுப்பில் இருந்த பொலிஸ், யாழ் பொலிஸ் ஆகியோரையும் பயன்பருத்தி தானே முன்னின்று நாசவேளைசெய்தான். யாழ்நூலகத்தை எரித்து அறியியல்,பண்பாட்டு,இனவழிப்பை ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் செய்து முடித்தது. ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிசங்களான கையெழுத்துப்பிரதிகள், ஓலைச்சுவடிகள், சங்கிலியன் கால மருத்துவ நூல்கலான வாகடங்கள் என விலைமதிப்பற்ற 97 ஆயிரம் வரையிலான நூல்கள் எரிந்து சாம்பராகின.

-தி.திபாகரன்-

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
October 2019
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்