வருடல்

செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் டி.பி.எஸ் ஜெயராஜ்!

கனடாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட சென்றபோது அவரது உதவியாளர் நிமலன் கார்திகேயனிடம் கனடிய தமிழர் சமூக அமையம் வழங்கிய 50,000 கனடிய டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக கட்டுரை ஒன்றை எழுதி இருந்த டி.பி.எஸ் ஜெயராஜ் என்ற ஊடகவியலாளர் அந்த கட்டுரையில் தான் குறிப்பிட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த கட்டுரை தொடர்பில் டி பி எஸ் ஜெயராஜுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்த நிலையிலேயே தனது இணையதளத்தில் இந்த மன்னிப்பை கோரியிருக்கும் ஜெயராஜ் தனது இந்த கட்டுரை முதலமைச்சர், அவரது மூலோபாய ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் ஆகியோருக்கும் கனடிய தமிழர் சமூக அமையத்துக்கும் அவதூறு சேர்க்கும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையில் தான் தெரிவித்த தவறான தகவல்களை முழுமையாக மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இந்த தகவல்களால் முதலமைச்சர், அவரது மூலோபாய ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் ஆகியோருக்கும் கனடிய தமிழர் சமூக அமையத்துக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புக்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கனடிய தமிழர் சமூக அமையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனவரி மாதம் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனின் வருகையின் போது நடைபெற்ற நிகழ்வுகளில் முதலமைச்சருடன் ஒரு மாலை என்கின்ற விருந்து நிகழ்வும் ஒன்றாகும். இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதியில் முதலமைச்சரதும் அவரது குழுவினருதும் வருகை மற்றும் நிகழ்வுக்கான செலவுகள் போக மீதியானது முதலமைச்சர் முன்னெடுக்கும் மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு கையளிப்பதற்காக இந் நிதிசேர் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந் நிதிவிடயங்களின் கணக்கு விபரங்கள் கனடிய தமிழர் சமூக அமையத்தினால் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந் நிதியானது முதலமைச்சர் அவர்களுடைய ஆலோசகர் நிர்மலன் கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை நிர்மலன் கார்த்திகேயன் அவர்கள் தவறாகக் கையாண்டார் எனவும், அதனடிப்படையில் இலங்கையின் பணமோசடிக் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனும் தலைப்புடன் உண்மைக்குப் புறம்பான செய்திக் கட்டுரை ஒன்றை திரு. டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் (David Buell Sabapathy Jeyaraj) அவர்கள் தனது இணைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

சமகாலத்தில், இலங்கையின் வடமாகாண சபையின் சில அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை நடவடிக்கைகள் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட இன்னும் சிலரும் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்கள். இவ்வாறான முதலமைச்சருக்கு எதிராக விடயங்கள் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழலில் வெளியிடப்பட்ட இச் செய்திக் கட்டுரையானது அந்தச் சூழலை மேலும் குழப்பிய ஒன்றாகவே பலராலும் பார்க்கப்பட்டது.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்தியைப் பிரசுரித்தமையானது முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் உட்பட இவ்விடயங்களை முன்னெடுத்து நடாத்திய சமூக அமைப்பான கனடியத் தமிழர் சமூக அமையத்தினரதும் முதலமைச்சர் வருகைக்கான ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து இயங்கிய அனைத்து அமைப்புக்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தியது.

இதனடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக திரு. டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் சட்டநடவடிக்கை ஒன்று கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது.

இச் சட்ட நடவடிக்கையின் பரஸ்பரத் தீர்வாக திரு. டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள் தான் இழைத்த தவறினை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருதல் உட்பட எமது நிபந்தனைகளுடன் உடன்படுவதான தீர்மானம் எட்டப்பட்டதற்கு அமைவாக அவர் தனது இணையத்தளத்தில் தவற்றிற்கான மன்னிப்புக் கோருதலுடன் அத் தவறான செய்தியையும் மீளப்பெறுகின்றார்.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தமது செய்திகள், ஆக்கங்கள் மற்றும் மறுபிரசுரவிடயங்களில் அவற்றை பிரசுரிக்க முன்னர், அவை தொடர்பிலான உண்மைத் தன்மையினை ஊடகதர்மம் சார்ந்து உரிய விளக்கம் பெற்றுமக்களுக்கு எடுத்துச் சென்று தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை, பல ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மேற்சொன்ன விடயம் தொடர்பாக எம்மை அணுகி விடயங்களின் உண்மையையும், அதன் தரவுகளையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக் காட்ட விரும்புவதுடன் அதற்கான நன்றியையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்