வருடல்

செய்திகள்

வன்முறையை காரணம் காட்டி யாழில் குவிக்கப்படும் இராணுவம்!

யாழ். குடா நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை, பொலிஸ் விசேட அதிரடிபடையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்ட படையணி ஒன்று யாழ் குடா நாட்டிற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் முழுவதும் நடமாடும் தேடுதல், மோட்டார் சைக்கிள் தேடுதல், வீதித்தடைகள் போன்றவற்றை மேற்கொண்டு சோதனையிடவுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி அதிகாரிகள் யாழ் குடா நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரவு நேரத்தில் மாத்திரமே செயற்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த நாட்களில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் காலை நேரத்தில் பதிவாகியிருந்தமையினால் நாள் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை வழங்குவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழ் குடா நாடு, வலிகாமம், வடமராட்சி ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் பிரித்து ஒதுக்கி அந்த பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிபடைக்கு மேலதிகமாக யாழ் குடா நாட்டின் பாதுகாப்பிற்காக விசேட பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும், வடபகுதியில் குறிப்பாக யாழ் குடாவில் அதிகளவு இராணூவத்தை நிலைகொள்ள வைக்கும் அரசின் திட்டத்திற்கமையவே குழப்பகரமான சூழலை உருவாக்கி, வன்முறைகளை தூண்டி விட்டு அதனை காரணம் காட்டி இராணூவ கட்டுப்பாட்டிற்குள்ளும், சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

இதற்கு சிறீலங்கா அரசுடன் பின்புலத்தில் பணியாற்றும் விசமிகளின் பங்கு அதிகம் இருப்பதாக தெரியவருகிறது.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Twitter Varudal News
 • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
 • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
 • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
 • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
 • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
 • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
 • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
 • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
 • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
 • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
 • 11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் 3 கடற்படை அதிகாரிகள் அகைது!
 • யாழில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரு நாள் தேடுதல் வேட்டையில் 100 பேர் கைது!
 • அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின!
 • படுகொலை விசாரணையை இளஞ்செழியன் நடத்தக்கூடாது – மேன்முறையீட்டு நீதியரசர்கள்!