வருடல்

செய்திகள்

விடுதலைப் புலிகள் பாணியில் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை வழங்கிய சீன அதிகாரிகள்!

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல குற்றங்களிற்காக பத்து பேரிற்கு சீனா அதிகாரிகள் மரணதண்டனையை அறிவித்துள்ளனர்.

குவான்டொங்கி;ன் தென்பகுதியில் உள்ள லுவெங் பகுதியை சேர்ந்த பொதுமக்களை மரணதண்டனை குறித்த அறிவிப்பை காண்பதற்காக வருமாறு சமூக ஊடகங்கள் ஊடாக இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன் பின்னர் காவல்துறையினர் தமது வாகனத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை மைதானமொன்றிற்கு கொண்டுவந்து  அவர்கள் இழைத்த குற்றங்களையும் அவர்களிற்கான தண்டனைகளையும் அதிகாரிகள் வாசித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்வையிட்டுள்ளனர்.பாடசாலை மாணவர்களும் சீருடையுடன் அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்களிற்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக சீர்கேடுகள், பாலியல் பலாத்காரம், கொலை, காட்டிக்கொடுப்பு போன்ற அதி உச்ச குற்றங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இதே போண்று மக்கள் முன்னிலையில் குற்றவாளிகளை நிறுத்தி அவர்களின் குற்றங்களை சொல்லி அவர்களுக்கான மரண தண்டனையை வழங்கியிருந்தது. (குற்றவாளிகளுக்கு இரண்டு எச்சரிக்கை வழங்கப்பட்டு அதையும் மீறி குற்றம் இழைத்தவர்களூக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது) இதன் காரணமாக குற்றங்கள் அற்ற தேசமாக தமிழர் தாயகம் நிமிர்ந்து நின்றதோடு, இரவு வேளைகளிலும் பெண்கள் தனிமையாக துணீவோடு நடமாட முடிந்திருந்தது. ஆனால் புலிகளின் ஆயுத மெளனிப்பின் பின் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இன்று அத்தனையும் தலை கீழாக மாறி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வரதட்சனஇக் கொடுமை, போதைவஸ்து என அத்தனையும் உள்ள தேசமாக தமிழர் தாயகம் மாறியுள்ளதென்பதே மறுக்கமுடியாத உண்மை.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
August 2019
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்