வருடல்

செய்திகள்

வெள்ளை வான் கடத்தலின் பின்னணிக் குற்றவாளிகளை அம்பலப்படுத்திய குற்றப்புலன்ஆய்வு பிரிவு:

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க மற்றும் தற்போது மரண தண்டனை கைதியாக உள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளமையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர், கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இம்மூவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கன்சைட் எனும் நிலத்தடி சிறைக் கூடங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.

குறிப்பாக 5 மாணவர் கடத்தல் விவகாரத்தில் கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தஸநாயக்க, முன்னாள் தளபதி கரன்னாகொட ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்கான சான்றுகளை குற்றப் புலனய்வுப் பிரிவினர் ஏற்கனவே கண்டறிந்திருந்தனர்.

இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியை சேர்ந்த பிரதீப் ஆகியோர் கன்சைட் முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இதில் கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸார் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் தற்போது காணாமல் போயுள்ள சாந்த எவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பி, அதி பாதுகப்பு வலயமான கன்சைட் நிலத்தடி முகாமுக்குள் வந்தார் என கேள்வி எழுப்பும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அது தொடர்பில் விசாரணை செய்கின்றது.

அத்துடன் கன்சைட் முகாமில் இருந்ததாக கூறப்படும் தற்போதும் காணாமல் போயுள்ள பிரதீப் என்பவர் யார் என்பதை அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.

இப்பாகமுவ பிரதீப் என அறியப்பட்ட குறித்த நபர், கொகரல்ல பொலிஸ் பிரிவில் தேவவரம, யக்கல இப்பாகமுவ எனும் முகவரியில் வசித்த விதாரன ஆரச்சிகே தொன் பிரதீப் நிஷாந்த என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

அவர் காணாமல் போனமை தொடர்பில் கொகரல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு உள்ள நிலையில், ஜீப் வண்டியில் வந்தோரால் அவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

அளவ்வை, கொகரல்ல பொலிஸ் நிலையங்கள் குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்துக்கு உட்பட்டு நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் இக்கடத்தல்கள் இடம்பெற்ற போது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவே குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ் பிரதானியாக செயற்பட்டுள்ளார்.

அத்துடன் 5 மாணவர் கடத்தல் விவகாரம் வெளிப்படுத்தப்பட காரணமாக இருந்த, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தனது தனிப்பட்ட விவகாரம் தொடர்பில் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முதலில் முறையிட்டதும் வாஸ் குணவர்தனவிடமாகும். பின்னரேயே அது பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே கரன்னாகொட, தஸநாயக்க மற்றும் வாஸ் குணவர்தன ஆகியோர் ஒன்றாக இந்த வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் செயற்பட்டனரா, அவ்வாறு வெள்ளை வானில் கடத்தப்படுவோர் கன்சைட் நிலத்தடி முகாமிம் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.

இந் நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
August 2019
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்