வருடல்

தகவல்

2 இலட்சத்தி 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனம் கண்டுபிடிப்பு!

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது.

தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது.

நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர்.

மண்ணில் புதையுண்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட இந்த எலும்புகளைக்கொண்டு ஹோமோ நலெடி என்கிற மனித இனம் 230,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர்.

முன்பு நினைத்ததைவிட இவர்கள் வாழ்ந்த காலம் நவீனமனிதர்களுக்கு நெருக்கமானது.

தென் ஆபிரிக்காவின் இந்த பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மனித இனமும் நவீன மனிதர்களின் மூதாதையர்களும் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அந்த பகுதியின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் இந்த புதிய மனித இனத்தின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.

நிலத்துக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் பாறை இடுக்குகளில் புகுந்து கும்மிருட்டில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கான எலும்புகளையும் பற்களையும் அங்கே கண்டெடுத்தனர்.

மனித மூதாதைய இனத்தவர் இறந்தவர்களை இங்கே புதைத்திருக்கக்கூடும் என்பதை இந்த சான்றுகள் குறிப்புணர்த்துகின்றன. அத்தகைய சடங்குகளுக்கான முதல் சான்றாக இது பார்க்கப்படுகிறது.

அவர்கள் இரண்டு கால்களில் நடந்தனர். ஆரஞ்சுபழ அளவிலான சிறிய மூளையைக்கொண்டிருந்தனர்.

முன்பு கண்டறியப்படாத குகைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நியோவின் எலும்புக்கூடு எதிர்கால ஆய்வுக்கான திசையை காட்டுகிறது.

நவீன மனிதர்கள் இந்த பூமியில் வேறு யாரோடெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதற்கான மேலதிக தரவுகள் இந்த ஆபிரிக்க நிலத்திற்குள் புதையுண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய மனித இனத்தின் தொழில்நுட்பம், உபகரணங்கள், மரபுகள் போன்றவை நமக்கும் முன்பே இந்த பூமியில் வாழ்ந்தவர்களுடையவையாக இருக்கலாம் என்கிற சாத்தியத்தை இந்த புதிய கண்டுபிடிப்புகள் குறிப்புணர்த்துகின்றன.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மக்களினதும்.வேங்கைக­ளினதும் கனவு என்றோ ஒரு நாள் நன­வா­கும் என்பதை எடுத்து காட்டும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு: இரா.சம்பந்தன்
  • படையினர் மீது ஐ.நா போர்க்குற்றச்சாட்டுக்களை உமத்தவில்லை என்கிறார் மைத்திரி!.
  • யாழ், பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் மண் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்!
  • ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று!
  • தமிழர்களுக்கு நீதி வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா – ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை