வருடல்

செய்திகள்

வவுனியாவில் அவசரமாக கூடியது தற்போதைய தமிழ் அரசியல்கட்சி தலைமைகள்:

இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்பில் சமகாலத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறுகிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா, இரண்டாம் குறுககுத்தெருவில் உள்ள விடுதியொன்றில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி இக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மற்றும் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஈ.சரவணபவன், யோகேஸ்வரன், மற்றும் வடக்கு மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவரிடம், இன்றைய கூட்டத்தில் எவ்வாறான விடயங்கள் ஆராயப்படுமென ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சம்பந்தன், தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவது குறித்தும் ஒற்றுமையை பலப்படுத்துவது குறித்தும் ஆராய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியானது, கூட்டமைப்பின் தீர்மானங்களை தனது தீர்மானங்களாக எடுக்கின்றதென அதன் ஏனைய பங்காளிக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், கூட்டமைப்பிலுள்ள முரண்பாடுகள் களையப்பட்டு ஒற்றுமையுடனும் சுமூகமாகவும் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என தமிழ் தரப்பு விரும்புகிறது. இவ்வாறான சூழ்நிலையில் நடைபெறும் இக்கூட்டமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
  • நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்!
  • ரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது  – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை