வருடல்

செய்திகள்

KP எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்:

குமரன் பத்மநாதன் (கே.பி)  வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று  அனுமதி வழங்கியுள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய KP-யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத் தீர்மானித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய குமரன் பத்மநாதனுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மனுதாரர் குறிப்பிட்ட அனைத்து குற்றச்செயல்களுடனும் பிரதிவாதியான குமரன் பத்மநாதனுக்கு தொடர்பில்லை என்பது பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளினூடாகத் தௌிவாவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதை அடுத்து மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் (KP) 80 களின் துவக்க காலம் முதல் இறுதிவரை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவு மற்றும் வினியோகம் என்பவற்றை செய்துவந்தவர் என்பதும், தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர் விடுதலைப்புலிகளின் பாரிய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயற்பட்டவ்அர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்