வருடல்

செய்திகள்

அகில இலங்கை மட்டத்தில் சாதனைகளை நிலைநாட்டி பதக்கங்களை வென்ற வடக்கு மாணவர்கள்!

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும்  34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட மாகாண மாணவர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவருக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் ஜதூஷன், 4.45 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும்,பெற்றுக் கொண்டார்.

இதேவேளை,12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீ அருணவி 4.53 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

நேற்று காலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ்,50.83 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் மிதுன்ராஜுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 55.58 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி வி. சாத்விகா, 3.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா மாணவி சி. ஹெரீனா 1.55 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

மாவீரர் நாள் 2018 – டென்மார்க்

மாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)

மாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)

மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)

மாவீரர் நாள் 2018 – சுவிஸ்

மாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்

27 November 2018
27 November 2018
BBC TAMIL NEWS 21/11/2018

முன்னைய செய்திகள்
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • புதிய அரசமைப்பு ஊடாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு:  பிரதமர் தெரிவிப்பு!
  • நிறைவேற்று அதிகார முறமை நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்: மலிக் சமரவிகிரம!
  • நல்லூர் பிரதேசத்துடன் இணைப்பதை கண்டித்து இணுவில் மக்கள் போராட்டம்!
  • யாழில், வாள் வெட்டுக்களை மேற்கொண்டுவந்தவர்களில் 9 பேர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு!
  • எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை முன்மொழிந்தார் சபாநாயகர் – ஏமாற்றத்தில் சம்பந்தர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை