வருடல்

செய்திகள்

இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் :

புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் ஏப்ரல் 01 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வரி செலுத்தக் கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது. இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டு,வெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும் அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீபகாலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரி மூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும்.

2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வரித்திருத்தங்களின் பிரகாரம் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் வரி நேற்று முதல் திருத்தப்பட்டுள்ளது.

7 இலட்சம் வருடாந்த சம்பளம் பெறும் ஒருவரிடம் இதுவரை வரி அறவிடப்பட்டது. புதிய வரி திருத்தத்தின் பிரகாரம் வருடாந்த சம்பளம் 12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 இலட்சத்திலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு 6 இலட்சத்திற்கும் 4 வீத வரி செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்கள் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்புப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டிக்கு 5 வீத வரி அறவிடப்படவுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வருமானத்தில் 15 இலட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்கள் அங்கிருந்து தமது உறவினர்களுக்கு அனுப்பும் பணத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்து.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
February 2020
M T W T F S S
« Apr    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்