செய்திகள்
ஊர்காவற்துறையில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு!
ஊர்காவற்றுறைப் பகுதியில் பொலிஸார்மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, யாழ் மருத்துவமைனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.