வருடல்

செய்திகள்

ஒட்டிசுட்டானில் புராதன சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பு!

ஒட்டிசுட்டான் கற்சிலைமடுப்பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ் ஆலயத்தின் சான்றுப் பொருட்களை அழித்து அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றினை இராணுவத்தின் 64ஆவது படைப்பிரிவினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பழமையும், புராதன வரலாற்று ஆலயமாகவும் திகழ்ந்த சிவன் ஆலயம் அமைந்திருந்த காணியின் உரிமையாளரான சமாதான நீதவான் திரு.கந்தையா சிவராசா அவர்கள் இவ் விடையம் தொடர்பில் தெரிவிக்கையில்…

கற்சிலைமடுப்பகுதியில் பரம்பரையாக வசித்து வருகின்றேன். 1921ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதிக்காணி இது. 2009ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இராணுவம் எனது காணியை கைப்பற்றி இராணுவ முகாமினை அமைத்துள்ளது.  எனது காணிக்குள் மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட எனது காணியிலிருந்த பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தை உடைத்து தரைமட்டமாக்கியதுடன் அதில் ஆலயம் இருந்தவற்றுக்கான தடயங்களையும் இல்லாமல் செய்யப்பட்டு அப்பகுதியில் காணப்பட்ட வெள்ளரசு மரத்தடியில் தற்போது பௌத்த விகாரையை அமைத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அப்பகுதியைச்சுற்றி 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 2013ஆம் ஆண்டு புராதன திணைக்களத்தில் (தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில்) பாரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவருடம் 6ஆம் மாதம் வர்த்தகமானியில் புராதன திணைக்களத்திற்குச் சொந்தமானதாக பகுதியாக குறித்த எனது காணியினை அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை தற்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலுள்ள 64ஆவது படைப்பிரிவு நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன் பழமைவாய்ந்த புராதனக்கல்லுகளை எடுத்துவந்துள்ளதுடன் புத்தர் சிலையை முன்பக்கத்தில் நிறுத்தி அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிடப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புராதனத்திணைக்களத்திடம் வினவியபோது அது புராதன திணைக்களத்திற்குரிய பகுதி எனவும் தெரிவித்துள்ளதுடன் வேறு எவரையும் அப்பகுதியிற்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 1921ஆம் ஆண்டு உறுதி எழுதப்பட்டுள்ளது 1960ஆம் ஆண்டு எழுதப்பட்ட வரைபடத்தில் இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், இந்து கலாச்சார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

எனவே இது திட்டமிடப்பட்டு அப்பகுதியிலிருந்த சிவன் ஆயலத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ்விடத்திலிருந்த தடயங்களையும் அகற்றி அப்பகுதியில் பௌத்தவிகாரை ஒன்றினை அமைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மாவீரர் நாள் 2018 – டென்மார்க்

மாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)

மாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)

மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)

மாவீரர் நாள் 2018 – சுவிஸ்

மாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்

27 November 2018
27 November 2018
BBC TAMIL NEWS 21/11/2018

முன்னைய செய்திகள்
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • புதிய அரசமைப்பு ஊடாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு:  பிரதமர் தெரிவிப்பு!
  • நிறைவேற்று அதிகார முறமை நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்: மலிக் சமரவிகிரம!
  • நல்லூர் பிரதேசத்துடன் இணைப்பதை கண்டித்து இணுவில் மக்கள் போராட்டம்!
  • யாழில், வாள் வெட்டுக்களை மேற்கொண்டுவந்தவர்களில் 9 பேர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு!
  • எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை முன்மொழிந்தார் சபாநாயகர் – ஏமாற்றத்தில் சம்பந்தர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை