வருடல்

செய்திகள்

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 9 ஆம் ஆண்டு நினைவு இன்று!

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் அறுபது ஆண்டு கால அடக்குமுறை ஆட்சியின் தமிழின அழிப்பு தாக்குதல்களின் உச்சமாய் 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்லிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான மக்க ள்கொன்றழிக்கப்பட்ட துயர நாள் இன்று. இதுவே தமிழர் தேசிய துக்க நாள்!

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளில் அவர்களுக்காக நெய்விழக்கு ஏற்றி மலர் தூவி அஞ்சலிக்கும் அதேவேளை எம் நெஞ்சங்களிலும் விடுதலை நெருப்பை பற்ற வைத்து அதை அணையாது இலக்கை அடையும் வரை கொண்டு சென்று கொன்றழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களினதும், தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்திற்காக மக்களையும், மண்ணையும் காத்து வீரச்சாவைத் தழுவிய 50,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களதும் கனவுகளை நனவாக்குவோம் என உறுதி கொள்வோம்.

உயிரை காக்க ஓடி ஓடி ஓட இடம் இன்றி முள்ளிவாய்க்கால் மண்னில் ஒன்றாக கூடி பசி, பட்டினி, காயங்களொடு உடல் சோர்வுற்ற நிலையிலும் நாம் வணங்கும் தெய்வம் எங்களை காக்காதா என்ற ஏக்கக்தோடு அழுது புலம்பி தவித்துக்கிடந்த இலட்சக்கணக்கான மக்களை  கொடிய ஆயுதங்களாலும், இரசாயணக் குண்டுகளாலும் கொன்று குவித்ததது சிங்கள அரசு.

சரணடைந்தவர்களைக் கூட ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்தும், வெட்டியும், சுட்டும் கொன்றழித்த சிங்கள படைகள் தமிழ் பெண்களை தங்கள் இச்சைக்கு உட்படுதி சித்திரவதை செய்து நிர்வாணமாக்கி தங்கள் மிருகத்தனத்தை அரங்கேற்றியிருந்தது.

சிறுவர்கள் உட்பட ஆண்கள் எல்லோரும் நிர்வாணமாக்கி கீறி கிழிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொன்ற கொடூரம் கண்டு துடிதுடித்துப் போன நாட்களின் நினைவு சுமந்து இன்றைய நாட்களில் நிற்கின்றோம்.

முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் யாருமே எதிர்பாரா வண்ணம் மூச்சின்றி முடங்கிப்போன அந்த நாட்கள் முதல் இன்றுவரை தமிழினம் சொல்லொனா துன்பங்களையும், அவமானங்களையும், சந்தித்து வருவதோடு நிலம், வளம், மொழி, பண்பாடு என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகிறது.

தமிழர்களை ஒன்றிணைய விடாது மீள் எழுச்சியை தடுக்கும் வகையிலான இராய தந்திர நகர்வுகளை சர்வதேசத்தின் ஆலோசனையோடு தமிழீழ விடுதலைப் போரை விரும்பாத, மற்ரும் விடுதலை புலிகளுக்கு எதிரான பணத்துக்காக எதையும் செய்யும் சில அயோக்கிய தமிழர்களையும் தன்னகத்தே வைத்தும் கொண்டு சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்தும் தமிழர்களை நசுக்கி வருகிறது.

இவைகளை உணர்ந்து தமிழர்கள் வெளியில் கதைப்பதை தவிர்த்து தந்திரமாக விடுதலை நோக்கி ஒற்றுமையாக நகர்ந்தால் மட்டுமே எஞ்சிய தமிழினம் ஆவது இழந்த உரிமைகளை மீளப் பெற்று சுதந்திரமாக வாழ முடியும். இல்லையேல் இன்னும் முப்பது ஆண்டுகளில் தமிழர்களுக்கு என்று எதுவுமே இலங்கைத் தீவில் இருக்காது போய்விடும் அபாய நிலையையே இன்று காண முடிகிறது.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
July 2019
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்