வருடல்

செய்திகள்

காலம் சென்ற தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வடமாகாண சபை முதல்வர் இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி தனது 94 ஆவது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார்.

எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும், தமிழக அரசியலிலும், தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மன நிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன.

கலைஞர் கருணாநிதி சுமார் 60 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். 5 தடவைகள் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒரு வரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் சமூக ரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன்.

இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ள விடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார்.

தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய – மாநில – தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்.

தமிழ் மொழி மீது தீராப் பற்று மிக்க கலைஞர் கருணாநிதி , தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததோடு, செம்மொழித் தமிழ் ஆய்வுக்காகச் சென்னையில் மத்திய நிறுவனம் ஒன்றையும் உருவாக்க வழிவகுத்தார்.

இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதை போடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கூட்டினார். கேட்கும் தோறும் உணர்வு முறுக்கேறும் ‘நீராடும் கடலுடுத்த’ என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியவரும் இவரே.

கலைஞர் கருணாநிதி 1956இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் ‘இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்தார். அன்றில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

எனினும், முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவைத் தடுத்திருக்க முடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவு செய்து விட்டு மறைந்துள்ள கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோப இலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றுள்ளது.

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வீட்டுத்திட்ட நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்:
  • இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரங்கள் என்னிடம்: சரத் பொன்சேகா
  • 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா வில் மகஜர் கையளிப்பு:
  • மட்டக்களப்பில் தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி!
  • எமது விருப்பங்களுக்கு மாறாகவே நாம் ஆளப்படுகிறோம் – ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்