வருடல்

செய்திகள்

கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா!

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது.

மத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக இந்த நிதியைச் செலவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த நிதியை எதற்காக செலவிடுவது என்று தெரிவு செய்யும் உரிமையும் எமக்கு இல்லை.

வடக்கு மாகாணம் முழுவதற்கும் ஒரே ஒரு தீயணைப்புப் படைப்பிரிவு தான் உள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட தீணை அணைக்க, ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அங்கு சென்ற போது எல்லாம் எரிந்து சாம்பராகியிருந்தது.

நாங்கள் நிதியைக் கோருகின்ற போது, வடக்கு மாகாணசபைக்கு சிறப்பு கவனிப்பை வழங்க முடியாது என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், எமது பிரதேசம் போரினால் பாதிக்கப்பட்டது. இது உண்மை. எமக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனைய மாகாணங்களுடன் வடக்கை ஒப்பிட முடியாது.

வடக்கு மாகாணசபைக்கு கனடியத் தமிழர்கள் 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க முன்வந்தனர். ஆனால் முதலமைச்சர் நிதியம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்காமல் மத்திய அரசும் மாகாண ஆளுனரும் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்