வருடல்

உலக செய்திகள்

சிரியாவில் கொடூரம் – கொன்றழிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்!

சிரியாவில் கிளர்ச்சி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா ராணுவத்தின் ஆதரவுடன் அரசு படை கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமான குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 600 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அரசு படையினர் குளோரின் விஷவாயு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பலருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 6 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 16 பேர் முச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முச்சுத்திணறலால் ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாகவும், மற்றொரு குழந்தைக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை சிரியாவில் 197 முறை அரசுப்படையினர் ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சிரியாவில் பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் பலியாகும் போர் கொடூரம் அதிகரித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்திலும் கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா பெளத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் கொன்றழிக்கப்பட்ட போது சர்வதேசம் மெளனமாக இருந்தமையால் தமிழர் இனமும், நிலமும், உடைமைகளும் அழிந்து போயிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
 • பொறிக்குள் சிக்கினால், வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும்: எச்சரிக்கிறார் வடக்கின் முதலமைச்சர்
 • மட்டக்களப்பில் – 25 ஆண்டுகளின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் விமான நிலையம்:
 • சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு, நடந்தது என்ன …? விபரிக்கிறார் அருட்தந்தை சக்திவேல்:
 • எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்களை பாதுகாக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்:
 • சாவகச்சேறியில் இளைஞ்ஞன் மீது சரமாரி கத்திக் குத்து – குத்தியவர் பொலீஸில் சரண்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
 • பொறிக்குள் சிக்கினால், வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும்: எச்சரிக்கிறார் வடக்கின் முதலமைச்சர்
 • மட்டக்களப்பில் – 25 ஆண்டுகளின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் விமான நிலையம்:
 • சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு, நடந்தது என்ன …? விபரிக்கிறார் அருட்தந்தை சக்திவேல்:
 • எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்களை பாதுகாக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்:
 • சாவகச்சேறியில் இளைஞ்ஞன் மீது சரமாரி கத்திக் குத்து – குத்தியவர் பொலீஸில் சரண்!
 • உதயசூரியனில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் வெளியேற்றம்:
 • ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு எச்சரிக்கை!
 • மனித உரிமை விவகாரம் – சிறீலங்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை:
 • யாழ்-அரியாலையில் யுவதி தற்கொலை – காரணம் சட்டத்தரணியாம்!